திமுகவில் மற்றொரு கைது? முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.. செப். 2 வரை நீதிமன்றம் கெடு!
DMK Former Minister Ponmudi Arrest Warrant : சைவம் மற்றும் வைணவம், பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் க. பொன்முடி. இவர், சைவம் மற்றும் வைணவம் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2025- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநகராட்சி கவுன்சிலரான உமா ஆனந்த் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த வழக்கானது சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கானது நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பு இன்று வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 6- ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.
பொன்முடிக்க எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
அப்போது, பொன்முடி தரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி இந்த வழக்கில், பொன்முடி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆனால், பொன்முடி இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி சுந்தரபாண்டியன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.




செப். 2- ஆம் தேதிக்குள் பொன்முடியை கைது செய்ய உத்தரவு
மேலும், வருகிற செப்டம்பர் 2- ஆம் தேதிக்குள் முன்னாள் அமைச்சர் பொன்முடியை சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 2- ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி சுந்தரபாண்டியன் தெரிவித்தார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவானது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் தொடரும் கைது நடவடிக்கை
ஏற்கனவே, தமிழகம் முதல்வர் விஜய் விமர்சித்ததற்காக திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்களான அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் மற்றும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது திமுகவின் முன்னாள் அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பொன்முடி நீதிமன்றத்தில் சரணடையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் பதில் சொல்லுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!