Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம்” இனி பெண்களும் விவசாயி ஆகலாம்! அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
Tamil Nadu Budget Agriculture Allocation : ரூ. 10 கோடியில் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார். இதில், இடு பொருள்கள், விதைகள், நிழல் வலை குடில்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக்கழக அரசின் 2026 2027 ஆம் நிதியாண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில், வீட்டு தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டிலேயே மாடி தோட்டங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யலாம். இதில், ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளிலும், கிராமப் பகுதிகளில் நிலப் பகுதிகளிலும் உயிரிகள் தோட்டம் உள்ளிட்டவை மூலமாக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட செடி, மரங்களை வளர்ப்பதற்காக “வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம் ரூ. 10 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும், டித்தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள்கள், விதைகள், நிழல்வலை குடில்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம்
இந்த ஆண்டு முதல் சூரிய கூடார விளக்கு அமைப்பதற்காக வழங்கப்படும் தொகை 3,50,000- த்தில் இருந்து 4, 40,000 – ஆக உயர்த்தி வழங்கப்படும். பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரங்களை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இதில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், பூச்சிக்கொல்லி மருந்து கருவிகள் உள்ளிட்டவற்றை குறைந்த வாடகையில் பெற்றுக் எடுத்துக் கொள்ளலாம்.
சூரிய ஒளி பம்பு செட் திட்டம்
வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும். இந்த ஆண்டின் மொத்த மதிப்பீட்டில் 30 சதவீதம் மகளிர் சுய உதவி குழுக்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளுக்கு நிலையான நீர்ப்பாசனத்தை உறுதி செய்வதற்காகவும் டீசல் பம்பு செட்டுகளுக்கு மாற்றாக மின்சார இணைப்புகள் இல்லாத பாசன நீர் ஆதாரங்களுக்கு மின் கட்டமைப்புகளுடன் சாராத தனித்து சூரிய சக்திகளால் இயங்கும் ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய உதவியுடன் சூரிய ஒளி மின்சார பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.