25 ஆண்டுகளைக் கடந்தது பாண்டவர் பூமி படம் – சேரன் வெளியிட்ட பதிவு
25 Years Of Pandavar Bhoomi | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் சேரன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பாண்டவர் பூமி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் சேரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல நடிப்பில் வெளியான படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேர்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் சேரன் இயக்கத்தில் ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவாகி கடந்த 21-ம் தேதி செப்டம்பர் மாதம் 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பாண்டவர் பூமி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழுவினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த பாண்டவர் பூமி படத்தில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து ராஜ்கிரண், ஷமிதா ஸ்ரீகுமார், ரஞ்சித், மனோரமா, விஜய குமார் வினு சக்ரவர்த்தி, முகேஷ் திவாரி, சந்திரசேகர், மற்றும் சார்லி உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.




25 ஆண்டுகளைக் கடந்தது பாண்டவர் பூமி படம்:
இந்தப் படத்தில் அண்ணன் தம்பி அக்கா தங்கை என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள் ராஜ்கிரண் குடும்பம். இவர்களுக்கு பூர்வீக ஊரில் வீடு கட்டிக்கொடுக்கும் எஞ்சினியராக வரும் அருண் விஜய்க்கு அந்த குடும்பத்து பெண்ணான ஷமிதா மீது காதல் ஏற்படுகின்றது. ஆனால் அவர்களின் குடும்ப கதையை கேட்டு அதிர்ந்து போகும் அருண் விஜய் இறுதியில் அந்த பெண்ணை திருமணம் செய்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை.
Also Read… தனுஷின் 56-வது படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்? வைரலாகும் தகவல்
இயக்குநர் சேரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
மகிழ்ச்சி .. நன்றி 🙏 https://t.co/HomeXAL1Ug
— Cheran Pandiyan (@CheranDirector) September 21, 2026
Also Read… பல உண்மை கதைகளை மையமாக கொண்ட கதை.. மீசையமுறுக்கு 2 படம் பற்றி பேசிய ஹிப்ஹாப் ஆதி!