தனுஷின் 56-வது படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்? வைரலாகும் தகவல்
Dhanush 56 Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வரும் ஓம் படத்தில் தற்போது நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் பணிகள் பிசியாக நடைப்பெற்றுவரும் நிலையில் அடுத்ததாக தனுஷின் 56-வது படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் 56-வது படத்தினை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனுஷின் 56-வது படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்?
அதன்படி தேனான்டல் முரளி மற்றும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஆகியோருடன் தனுஷுக்கு நீண்ட காலமாக இருந்து வரும் பண விவகாரம் தொடர்பான பிரச்சனை மீண்டும் தலைதூக்கியுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, இப்பிரச்சனையைத் தீர்க்க தெனான்டல் முரளிக்கு ரூபாய் 15 கோடியும், ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கு ரூபாய் 8 கோடியும் வழங்க தனுஷ் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும், அந்தச் சமரச ஒப்பந்தம் எதிர்பார்த்தபடி முழுமையடையவில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பணிகளைத் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்தச் சூழல் படத்தின் படப்பிடிப்புத் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், இப்பிரச்சனையில் தலையிட்டுத் தீர்வு காணுமாறு தனுஷ் நடிகர் சங்கத்தை அணுகியுள்ளதாகவும், இது தொடர்பாகத் தொடர்புடைய திரையுலக அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் காரணமாக தனுஷின் 56-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
News : Dhanush’s Next Reportedly Faces Production Roadblock 😱
Dhanush’s long-standing financial dispute involving Thenandal Murali and Five Star Kathiresan has reportedly resurfaced.
Earlier, it was reported that #Dhanush had agreed to pay ₹15 Cr to Thenandal Murali and ₹8… pic.twitter.com/LQn6HbRGbQ
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 20, 2026
Also Read… Ajith Kumar: அடுத்த ஆண்டில் எனது திட்டம்..? ஓபனாக சொன்ன அஜித் குமார்!


