AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிரெடிட் கார்டில் 30% விதி என்றால் என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Why Is 30 Percentage Rule Important In Credit Card | தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது பொருளாதார தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் கவனிக்க வேண்டிய 30 சதவீத விதி என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் கார்டில் 30% விதி என்றால் என்ன.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Sep 2026 15:25 PM IST

விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலான மக்களின் வருமானம் உயராமலே உள்ளது. இந்த நிலையில், குறைவான வருமானத்தால் ஏற்படும் பண தேவைகளை பூர்த்தி செய்ய பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். தேவைக்கு பயன்படுத்திக்கொண்டு, 40 நாட்களில் பணத்தை திருப்பி செலுத்த கிரெடிட் கார்டில் (Credit Card) வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், பலருக்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. இந்த நிலையில் தான், சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விதி தான் 30 சதவீதம்.

இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 35 சதவீத விதி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு – வரம்புக்கு ஏற்ப செலவு செய்வது நல்லது

வங்கிகள் பெறும் கடன்களை விடவும் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தும் பட்சத்தில், ரிவார்டு பாயிண்ட்ஸ், சிறப்பு சலுகைகளை பெற முடியும். இந்த வட்டி என்பது கட்டாயம் அல்ல. காரணம், கிரெடிட் கார்டில் வட்டி இல்லாமல் பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்படும். அதனை மீறும் பட்சத்தில் தான் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

இதையும் படிங்க : MIS திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

கிரெடிட் கார்டில் “Credit Utilization Ration” என்றால் என்ன?

உங்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டு வரம்பில் நீங்கள் எவ்வளவு பணத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதின் அளவு தான் இந்த கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ ஆகும். உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியில் இருந்து கிரெடி கார்டு வாங்குகிறீர்கள். அதன் மொத்த வரம்பு ரூ.1 லட்சம் என்றால் அதில் நீங்கள் 40,000 பணத்தை செலவு செய்துவிட்டீர்கள் என்றால் உங்களது கிரெடிட் யூட்டிலிசேஷன் ரேஷியோ 40 சதவீதம் ஆகும்.

இதையும் படிங்க : செலவு ரூ.1.38 லட்சம் கோடி.. வருவாய் பற்றாக்குறை ரூ.20,340 கோடி!”.. வெளியான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!!

இந்த ரேஷியோ குறைவாக உள்ளவர்களை நல்ல வாடிக்கையாளர்களாக வங்கிகள் கருதும். அதாவது, கிரெடிட் கார்டை பொருத்தவரை அதிகபட்சமாக 30 சதவீதம் பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us