Tamil Nadu Agriculture Budget 2026 : விவசாய பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரம்!
Tamil Nadu Budget Agriculture Allocation : தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்க்கலாம் .
விவசாய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விவரம்
தமிழக அரசின் நிகழாண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில், அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
- விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூபாய் 5.20 கோடி ஒதுக்கீடு.
- உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு.
- உழவர் சந்தைகளை புணரமைப்பதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு.
- வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் அமைப்பதற்காக ரூ. 4 கோடி ஒதுக்கீடு.
- நீலகிரி மாவட்டம், ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு.
- நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டைய படிப்பு கல்லூரி அமைப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு.
- தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் அமைப்பதற்காக ரூ. 63.81 கோடி ஒதுக்கீடு.
- வேளாண் பல்கலைக்கழக மாணவர் களப்பயிற்சிக்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு.
வேளாண் பல்கலைக்கழக விடுதிகள் முதல்…
- வேளாண்மை பல்கலை மாணவர் விடுதிகள் அமைப்பதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு.
- பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்துக்காக ரூ. 27.21 கோடி ஒதுக்கீடு.
- காட்டுப்பன்றிகள் சேத தடுப்பு திட்டம் ரூ. 7.35 கோடி ஒதுக்கீடு.
- கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 9 கோடி ஒதுக்கீடு.
- பனை பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
- ஏற்றுமதிக்கான நஞ்சற்ற நன்னெறி சாகுபடிக்காக ரூ. 8. 43 கோடி.
- தென்னை சிறப்பு திட்டம் ரூ.41 கோடி ஒதுக்கீடு.
- உயிர்ம வேளாண் பட்டய படிப்பு கல்லூரிக்கு ரூ. 15 கோடி.
வேளாண் நுண்ணறிவு சந்தை முதல்…
- க்யூ ஆர் கோடுடன் விதை சான்றிதழ் ரூ. ஒரு கோடி.
- வேளாண் நுண்ணறிவு சந்தை மகத்துவ மையம் ரூ.4 கோடி.
- உழவர் சந்தைகளில் மின்னணு விலை பலகைகள் ரூ. 1.50 கோடி.
- வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ரூ. 10 கோடி.
- வான்மகள் ட்ரோன் திட்டம்- மகளிருக்கு பயிற்சி ரூ. 4 கோடி.
- 2 இடங்களில் 1000 டன் சேமிப்பு கிடங்கு வசதி அமைக்க ரூ. 4.80 கோடி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்த முழு விவரம்: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
Follow Us