Tamil Nadu Agriculture Budget 2026 Highlights: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. என்னென்ன திட்டங்கள்?
Tamil Nadu Agriculture Budget 2026 Updates in Tamil: தமிழ்நாடு அரசின் 2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்தார். விவசாயம் சார்ந்த பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்
TVK Government Tamil Nadu Agriculture Budget 2026 News Updates in Tamil: ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். வேளாண் துறையை பொருத்தவரை பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.விவசாயம் சார்ந்த பல அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். ஆகஸ்ட் 06ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கலானது . முன்னதாக நேற்று தவெக அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் தங்களது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்தனர். தவெகவின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய அமைச்சர் 12.31 மணிக்கு முடித்தார்.
வீடியோ
பட்ஜெட் தொடர்பான சில கேள்வி பதில்கள்
1. தமிழ்நாடு பட்ஜெட் என்றால் என்ன?
தமிழ்நாடு அரசின் ஓராண்டுக்கான வரவு-செலவுத் திட்டமே தமிழ்நாடு பட்ஜெட் ஆகும். இதில் அரசின் வருவாய், செலவுகள், புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன.
2. வேளாண் பட்ஜெட் என்றால் என்ன?
விவசாயம், பாசனம், கால்நடை, மீன்வளம், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியாக தாக்கல் செய்யப்படும் நிதித் திட்டமே வேளாண் பட்ஜெட்.
3. தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரங்களை எங்கு பார்க்கலாம்?
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாடு அரசின் நிதித்துறை இணையதளம் மற்றும் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் முழு விவரங்களையும் பார்க்கலாம்.
LIVE NEWS & UPDATES
-
முதல்வர் விஜய் அங்கு பதில் சொல்லட்டும் – உதயநிதி
பட்ஜெட் தொடர்பான கேள்விகளை சட்டப்பேரவையில் நாளை விவாதிப்போம். முதல்வர் விஜய் அங்கு பதில் சொல்லட்டும் – உதயநிதி
-
பழைய திட்டங்களுக்கு பெயரை மாற்றியுள்ளனர் – உதயநிதி
இந்தப்பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே இல்லை. பழைய திட்டங்களுக்கு பெயரை மாற்றியுள்ளனர் – உதயநிதி
-
TN Agriculture Budget: இயற்கை உரங்களை ஊக்குவிக்க வேண்டும்- பிரேமலதா
இயற்கை உரங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். கருவேல மரங்களை அழித்து விளைநிலங்களாக மாற்ற வேண்டும் – பிரேமலதா
-
ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் அறிவிப்பு – திமுக தலைவர் ஸ்டாலின்
வெற்று பட்ஜெட்டாக அமைந்த வேளாண் பட்ஜெட். திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட் அறிவிப்பு – திமுக தலைவர் ஸ்டாலின்
-
100 நாள் வேலைவாய்ப்பு அறிவிப்பு இல்லை – பிரேமலதா
100 நாள் வேலைவாய்ப்பு தொடர்பாக அறிவிப்புகள் எதுவும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
-
முதல்வர் விஜய் வாய் திறக்கவே இல்லை – ஈபிஎஸ்
ஜூன் ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் கிடைக்கவில்லை. முதல்வர் விஜய் வாய் திறக்கவே இல்லை – ஈபிஎஸ்
-
இனிக்க இனிக்க பேசி ஏமாற்றிவிட்டனர் – ஈபிஎஸ்
தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிய தவெக இன்று அவர்களை ஏமாற்றிவிட்டது – இபிஎஸ்
-
தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் – முதல்வர் விஜய் புகழாரம்
பொதுபட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் – முதல்வர் விஜய் புகழாரம்
-
முதல்வர் சொன்னதை செய்யவில்லை – ஈபிஎஸ்
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3500கொடுப்பதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை – ஈபிஎஸ்
-
TN Agriculture Budget: பேரவையில் ஜால்ரா – உதயநிதி
சட்டப்பேரவை மரபை மீறி முதலமைச்சரை புகழ்ந்து ஜால்ரா அடித்துள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்
-
ஆதார விலை தொடர்பான அறிவிப்புகள் இல்லை – ஈபிஎஸ்
நெல் கரும்பு ஆதார விலை தொடர்பான அறிவிப்புகள் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை – ஈபிஎஸ்
-
பட்ஜெட் என்ற நாடகத்தை தவெக அரங்கேற்றியுள்ளது – இபிஎஸ்
கடந்தகால ஆட்சியைப்போல வேளாண் பட்ஜெட் என்ற நாடகத்தை தவெக அரங்கேற்றியுள்ளது – இபிஎஸ்
-
Tamil Nadu Budget update: பட்ஜெட்டில் எதுவுமே இல்லை – எடப்பாடி பழனிசாமி
வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம். இரண்டரை மணி நேர பட்ஜெட்டில் எதுவுமே இல்லை – எடப்பாடி பழனிசாமி
-
TN Agri Budget 2026: 2.5 மணி நேரம் வாசித்தார் அமைச்சர் வினோத்
வேளாண் பட்ஜெட்டை 2.5 மணி நேரம் வாசித்தார் அமைச்சர் வினோத்
-
TN Agriculture Budget: மக்காச்சோள உற்பத்தி – ரூ.36 கோடி ஒதுக்கீடு
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத்திட்டத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு என பட்ஜெட்டில் அறிவிப்பு
-
வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மேம்படுத்துதல்
உதகையில் வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் – அமைச்சர் வினோத்
-
Tamil Nadu Agriculture Budget 2026: நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண் பட்டயப்படிப்பு கல்லூரி
கும்பகோணம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண் பட்டயப்படிப்பு கல்லூரி ரூ.5கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்
-
கோழிக்கழிவுகள் டூ உரம்
கோழிக்கழிவுகளை உருண்டை வடிவில் உரங்களாக மாற்றும் திட்டத்துக்கு ரூ.1கோடி ஒதுக்கீடு
-
Tamil Nadu Agriculture Budget 2026: வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம்
ரூ. 10 கோடியில் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் வினோத் அறிவிப்பு
விரிவாக படிக்க: க்ளிக் செய்க
-
உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 20 கோடி
தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் வினோத்
-
வேளாண் பொறியியல் பயிற்சி மையம்
ரூ.4 .6கோடி மதிப்பில் வேளாண் பொறியியல் பயிற்சி மையம் அமைக்கப்படும் – அமைச்சர் வினோத்
-
Tamil Nadu Agriculture Budget 2026: நம்மாழ்வார் விருது வழங்கப்படும்
ஆண்டுதோறும் சிறந்த 5 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அறிவிப்பு
-
தென்னை சாகுபடியை ஊக்குவிக்க பல திட்டங்கள்
தென்னை சாகுபடியை ஊக்குவிக்கவும், பூச்சி நோயை தடுக்கவும் வேளாண் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியீடு.
-
Tamil Nadu Agriculture Budget: வெங்காய சேமிப்பு கிடங்குகள்
வெங்காய சேமிப்பு கிடங்குகள் ரூ.22.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன் மூலம் சீரான வெங்காய விநியோகம் உறுதிப்படுத்த முடியும் – அமைச்சர்
-
வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்
மாடித்தோட்டம் திட்டத்திற்கு, ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்
-
மறக்கப்பட்ட தானியங்களை கொண்டு வர திட்டம்
மறக்கப்பட்ட தானியங்களை மீண்டும் கொண்டு வர பட்ஜெட்டில் புது திட்டம்
தகவல்
தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026 – 2027#CMJosephVijay | #TNDIPR | #TNAgribudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @vinothravi11 | pic.twitter.com/vlVMh6L6EU
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2026
-
Tamil Nadu Agriculture Budget: காளாண் வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்
காளாண் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.50 லட்சத்தில் திட்டம் அறிவித்தார் அமைச்சர் வினோத்
-
புதிய தென்னை நாற்றுப்பண்ணை
கரூர் முதலைப்பட்டியில் புதிய தென்னை நாற்றுப்பண்ணை அமைக்கப்படும் – ரூ48 லட்சம் ஒதுக்கீடு
-
விலங்குகள் ஏற்படும் பாதிப்புகள்
காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை
தகவல்
தமிழ்நாடு வேளாண்மை நிதிநிலை அறிக்கை 2026 – 2027#CMJosephVijay | #TNDIPR | #TNAgribudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | @vinothravi11 | pic.twitter.com/EcJ7HXykBw
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2026
-
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ரூ4 கோடி நிதி
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ரூ4 கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் அறிவிப்பு
-
செயற்கை நுண்ணறிவு திட்டத்துக்கு ரூ2கோடி ஒதுக்கீடு – அமைச்சர் வினோத்
ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி, உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டத்துக்கு ரூ2கோடி ஒதுக்கீடு – அமைச்சர் வினோத்
விரிவாக படிக்க: க்ளிக் செய்க
-
பயிர்க்காப்பீடு – ரூ.648 கோடி ஒதுக்கீடு
38 மாவட்டங்களுக்கும் பயிர்க்காப்பீடு வழங்கப்படும். அதற்கான ரூ.648 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் வினோத்
-
TN Agriculture Budget 2026 : மண்வளம் பாதுகாப்பு இயக்கம் நடத்தப்படும் – அமைச்சர் வினோத்
1 கோடி விவசாயிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் மண்வள அட்டை வழங்கப்படும். மண்வளம் பாதுகாப்பு இயக்கம் நடத்தப்படும் – அமைச்சர் வினோத்
-
எல் நினோ பாதிப்பு – அமைச்சர் தகவல்
எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு – அமைச்சர் வினோத்
-
டெல்டா பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன
டெல்டா பகுதிகளில் 2509 கிமீ வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன – அமைச்சர் வினோத்
-
Tamil Nadu Agriculture Budget: விவசாயிகளின் நலனை காக்க தவெக அரசு உறுதி
வேளாண் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை தொடருகிறது. விவசாயிகளின் நலனை காக்க தவெக அரசு உறுதி பூண்டுள்ளது – அமைச்சர் வினோத்
-
வேளாண்மை புதிய பரிணாமம் – அமைச்சர் வினோத்
2021ம் ஆண்டு முதல் வேளாண்மை புதிய பரிணாமம் பெற்றுள்ளது என அமைச்சர் வினோத் உரை
-
Tamil Nadu Agriculture Budget: அதிக நேரம் புகழ்ந்து பேசியதால் அமளி
முதல்வர் விஜய்யை அதிக நேரம் புகழ்ந்து பேசியதால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி. இதைனையடுத்து நேரடியாக பட்ஜெட்டை வாசிக்கச்சொல்லி சபாநாயகர் உத்தரவு
விரிவாக படிக்க: இங்கே க்ளிக் செய்க
-
பாமரர்களின் ஜனநாயகன் நீங்கள்- முதல்வர் விஜய்க்கு அமைச்சர் வினோத் புகழாரம்
பணநாயகத்தை தோற்கடித்த பாமரர்களின் ஜனநாயகன் நீங்கள் என முதல்வர் விஜய்க்கு அமைச்சர் வினோத் புகழாரம்
-
பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் வேளாண் துறை அமைச்சர் வினோத்
-
Tamil Nadu Agriculture Budget: கருப்பு டிஷர்ட் அணிந்து வந்த உதயநிதி
கருப்பு டிஷர்ட் அணிந்து சட்டப்பேரவை வருகை தந்தார் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்
-
Tamil Nadu Agriculture Budget: அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை வருகை
-
கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள்
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்
-
காத்திருப்போருக்கு வேளாண் மின் இணைப்பு?
வேளாண் மின் இணைப்பிற்காக கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2 லட்சத்து 53 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்புகள் வழங்குவது குறித்த அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
பெண் விவசாயிகளுக்கு சலுகை?
குறிப்பாக பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும் என்று அமைச்சர் வினோத் தெரிவித்திருந்தார். இதனால் இந்த வேளாண் பட்ஜெட்டில் பெண் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு
நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக் ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கள் இறக்க அனுமதி?
தவெக ஆட்சியில் கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். கேரளாவில் கள் இறக்க அனுமதி கொடுத்துள்ளதால் விவசாயிகள் பலனடைந்துள்ளனர். அதேபோல் இங்கும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த பட்ஜெட்டில் அவர்கள் எண்ணம் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
-
விசைத்தறி கூடத்திற்கு சோலார் பேனல்?
விசைத்தறிக் கூடங்களுக்கு சோலார் பேனல் பொருத்துவதற்கு மானியம் வழங்க வேண்டும். தேர்தலில் அறிவித்தது போல் தறிக்கூடங்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தங்கள் எதிர்பார்ப்புகளை தெரிவித்திருந்தனர். இந்த பட்ஜெட்டில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கல்விச் செலவை அரசே ஏற்கும்?
2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆண்டுக்கு ரூ.15,000 நிதியுதவி?
சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் விதைப்புக் கால நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் இரண்டு தவணைகளில் (ஜூலை – ஆகஸ்ட் பருவம், ஜனவரி – பிப்ரவரி பருவம்) வழங்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தவெக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
-
உழவர்களுக்கு உரிமைத் தொகை?
இந்த வேளாண் பட்ஜெட்டில், உழவர்களுக்கு உரிமைத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 24,000 வழங்கிட வேண்டும். சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 உற்பத்தி மானியம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்:
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் மற்றும் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். பருவமழை மாற்றங்கள் மற்றும் உர விலை உயர்வைச் சமாளிக்க உரிய நிவாரணங்களும் கோரப்பட்டுள்ளன. பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
-
விவசாயிகளின் முக்கிய கோரிக்கை:
வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 3 கி.மீ. முதல் 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்.
-
கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 60, பசும்பாலுக்கு ரூ. 50 என உயர்த்தி வழங்கிட வேண்டும். அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் (கம்பு, காராமணி உட்பட) அரசே நேரடியாகக் கொள்முதல் செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு.
-
விவசாயிகளின் ஆதங்கம்:
ஒரு மாநிலத்தின் உணவு பாதுகாப்பிற்கும், கிராப்புற வாழ்வாதாரத்திற்கும் அடித்தளமாக விளங்குவது வேளாண்மை மற்றும் அதை சார்ந்த தொழிலாகும். வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டாலும், தங்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறைந்தபாடில்லை என்றே விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.
-
விவசாயிகள் எதிர்பார்ப்பு இதுதான்:
தமிழக அரசு இன்று தாக்கல் செய்ய உள்ள வேளாண் பட்ஜெட்டில், கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கான ஆதார விலை குறித்த அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
மேலும் வேளாண் பட்ஜெட்டில் தவெக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத கடன்களும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீத கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
-
கோடை உழவுக்கான மானியம் மீண்டும் வழங்கப்படுமா?
டிராக்டர் வாடகை உயர்ந்துவிட்டதால் கோடை உழவுக்கான மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உழவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும், வேளாண் அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்றுவதை உறுதி செய்ய ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
‘உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0’முழு வீச்சில் செயல்படுத்தப்படுமா?
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைக்கும் உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0 என்ற திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் ஒவ்வொரு அலுவலகமாக அலைய வேண்டிய நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வேளாண் பட்ஜெட்டில் நெல்லுக்கான ஆதார விலை நிர்ணயம்
தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 6, 2026 நாளை தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதார விலையை நிர்ணயம் செய்தல், சந்தையில் சரிவு ஏற்படும் போது அதை அரசு ஏற்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் உரிமை அட்டை
வேளாண் பட்ஜெட்டில் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் உரிமை அட்டை வழங்குவது, ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் நேரடி வங்கி கணக்கில் உதவி தொகையாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதுகாக்கப்பட்ட மரமாக மனை மரம்?
தமிழக வேளாண் பட்ஜெட்டில் தமிழகத்தில் பனை மரம் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவித்தல், சொந்த விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயி குடும்பத்துக்கும் விதைப்பு கால நிதி ரூ.15 ஆயிரம் 2 தவணையாக வழங்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படுமா?
நெல் மழையில் நனைந்து சேதமடைவதை தவிர்க்க நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும். பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகியவை விவசாயிகளின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.
-
நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்படுமா?
வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் நடத்தி, கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் கரும்பு, நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்த வேண்டும், குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விவசாயிகள் சார்பில் தெரவிக்கப்பட்டன.
-
பயிர் கடன் தள்ளுபடி?
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் நாளை வெளியாகும் வேளாண் பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published On - Aug 05,2026 7:00 PM