Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!
Tamil Nadu Budget Agriculture allocation : தமிழகத்தில் பெண்கள் ட்ரோன்கள் இயக்குவதற்காக வெற்றிவான் மகள் திட்டம் செயல்படுத்துவதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 1.50 கோடியில் 500 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார் .
தமிழக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில், அவர் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில் முக்கிய அறிவிப்பாக வெற்றி வான்மகள் திட்டம் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டமானது முழுக்க முழுக்க பெண்கள் பயன அடைவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெற்றி வான்மகள் திட்டம் இந்தியாவின் ட்ரோன் தொழில் நுட்பம், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம், கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண் விவசாயிகளாக அறிவித்துள்ள நிலையில் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
ரூ. 1.5 கோடியில் பெண்கள் ட்ரோன்கள் இயக்கும் பயிற்சி
மேலும், வேளாண் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் ஆகியவற்றை எளிதாக்கப்படுவதுடன் ஆள் பற்றாக்குறைகளை எதிர்கொள்வதற்காக தகுதி உள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு மாநில அரசு சார்பில் ட்ரோன் இயக்கும் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியானது ரூ. 1.50 கோடில் செலவில் வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். விவசாயம் காப்பதற்காக வான்மகள் படை உருவாக்கப்பட உள்ளது.
உழவர் சந்தைகள் புனரமைப்பு
உழவர் சந்தைகள் புனரமைப்பதற்காக நடப்பாண்டில் 8 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், சென்னையில் உள்ள பல்லாவரம், ஆவடி ஆகிய உழவர் சந்தைகளை நவீன ஒருங்கிணைந்த உழவர் சந்தைகளாக மறுசீரமைக்கவும், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள வேப்பந்தட்டை உழவர் சந்தை வேம்பலூருக்கு இடம் மாற்றம் செய்யவும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கு இடமாற்றம் செய்து புதிய கட்டடம் கட்டவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழர் சந்தைகளில் மின்னனு விலை பட்டியல்
தமிழகத்தில் உள்ள 124 உழவர் சந்தைகளில் மொத்த சந்தையை விட கூடுதலாகவும், நுகர்வோருக்கு சில்லறை விலையை விட குறைவாகவும், விலை கிடைத்திட ஏதுவாக அங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து காய்கறிகளுக்கும் அன்றாட விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் விலைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் மின்னணு விலை பலகைகள் 1.4 கோடியில் அமைக்கப்பட உள்ளது.