AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சுடச்சுட சமோசா… சுண்டும் ஆசை… ஜெயிக்குமா 10 செகண்ட் சுயகட்டுப்பாடு?!

The 10-Second Samosa Test: பிரபல நரம்பியல் நிபுணர் முன்வைத்த '10-செகண்ட் சமோசா சோதனை', சுவையான பொரித்த உணவுகளைக் கண்டு மனதைக் கட்டுப்படுத்தி விலகிச் செல்வது சிறந்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் நாவடக்கத்திற்கும் சான்றாக அமைகிறது என்பதை உணர்த்துகிறது. சத்தான உணவுகளைத் திட்டமிட்டு உட்கொள்வதே நீண்டகால இதய மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும்.

சுடச்சுட சமோசா… சுண்டும் ஆசை… ஜெயிக்குமா 10 செகண்ட் சுயகட்டுப்பாடு?!
சுடச்சுட சமோசாImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 21 Sep 2026 13:13 PM IST

சுடச்சுட இருக்கும் சமோசாவைப் பார்த்ததும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அதை வாங்கிச் சாப்பிட்டு விடுகிறீர்களா? பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுடீர் குமார் என்பவர் வெளியிட்ட ’10-செகண்ட் சமோசா டெஸ்ட்’ (10-Second Samosa Test) சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உங்கள் முன்னே இருக்கும் மொறுமொறுப்பான சமோசாவைப் புறக்கணித்து, வெறும் சர்க்கரை இல்லாத காபியை மட்டும் குடித்துவிட்டு 10-ல் 9 முறை உங்களால் கடந்து செல்ல முடிந்தால், உங்களுக்கு அசாத்தியமான சுயகட்டுப்பாடு இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இத்தகைய நாவடக்கம் ரத்த சர்க்கரை அளவு, உடல் எடை மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்பது அவரது கருத்தாகும்.

சமோசா பரிசோதனையும் தற்காலிக இடைவெளியும்

இந்த சோதனையை மருத்துவ வல்லுநர்கள் முழுமையாக ஏற்காவிட்டாலும், இதில் ஒரு முக்கியமான ஆரோக்கியப் பாடம் ஒளிந்திருப்பதாகக் கூறுகின்றனர். உணவைப் பார்த்தவுடன் அதை உடனடியாகச் சாப்பிடாமல் சில நொடிகள் சிந்திப்பது ஒரு நல்ல பழக்கமாகும். நாம் உண்மையிலேயே பசியில் இருக்கிறோமா அல்லது வெறும் நாவாசை மற்றும் தூண்டுதலால் சாப்பிட நினைக்கிறோமா என்பதை இந்த குறுகிய இடைவெளி தெளிவுபடுத்தும். இது நபர்களின் உணவுத் தேர்வுகளையும் சுயகட்டுப்பாட்டையும் கண்டறிய உதவும் எளிய வழியாகப் பார்க்கப்படுகிறது.

சுயகட்டுப்பாட்டை தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள்

ஒருவர் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது என்பது வெறும் மன உறுதியை மட்டும் பொறுத்தது அல்ல என்று மனநல மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பசி, மன அழுத்தம், போதிய உணவுத் திட்டமிடல் இல்லாமை மற்றும் சுற்றியுள்ள சூழல் போன்றவை ஒருவரின் முடிவை மாற்றக்கூடும். மதிய உணவைத் தவிர்க்கும் ஒருவருக்குத் தன் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். எனவே, வெறும் சுயகட்டுப்பாட்டை மட்டும் நம்பியிருக்காமல், கடலை, பழங்கள், அவித்த முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எப்போதும் தயாராக வைத்திருப்பது நல்லது.

Also Read: கேரட் சாப்பிடுவதால் பார்வை குறைபாடு முற்றிலும் சரியாகிவிடுமா?

எண்ணெயில் பொரித்த உணவுகளும் வளர்சிதை மாற்றமும்

ஒரு முறை சமோசா சாப்பிடுவதால் மட்டுமே ஒருவரின் ஆரோக்கியம் கெட்டுவிடாது என்றாலும், பொரித்த உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது பேராபத்தாகும். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பொரிக்கும் போது அதில் தீங்கு விளைவிக்கும் ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans fat) உருவாகிறது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தை உயர்த்துகிறது. எனவே, நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதே நீண்டகால உடல் நலத்திற்கு வழிவகுக்கும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us