பெற்றோர்களே உஷார்.. 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து நோ.. மருந்து கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை!
Cough Syrups Restrictions : இந்தியாவில் 4 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் கொடுக்கக் கூடாது என்று ம், இது தொடர்பாக மருந்து பாட்டில்களில் எச்சரிக்கை அடங்கிய சிவப்பு நிற லேபில்கள் ஓட்டப்பட உள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது .
இந்தியாவில் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் வாங்கப்படும் மருந்துகளில் இருமல் மருந்தும் ஒன்றாக இருந்து வருகிறது. சில குழந்தைகளிடம் இதன் பயன்பாடு காலப்போக்கில் அதிகரித்துள்ளது. 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இதன் பயன்பாட்டை குறைப்பதற்காக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருமல் மருந்து பாட்டில்களில் சிவப்பு நிற லேபிள்களை ஒட்டுவதற்கு பரிசீலனை செய்து வருகின்றனர். இது கைக்குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு கிடையாது. அதற்கு மாறாக 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் படங்களை அதில் இடம்பெற செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தை பயன்படுத்தக்கூடாது என்ற பின்வரும் எச்சரிக்கை பாட்டிலில் சிவப்பு நிறத்தில் தெளிவாக காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இருமல் மருந்துகளை முறையற்று பயன்படுத்துவதை தடுக்க
இது பரிசீலனைக்காக மருந்துகள் ஆலோசனை குழுவில் இருப்பதாகவும், கடந்த 1945- ஆம் ஆண்டு மருந்துகள் விதிகள் 96- இன் கீழ் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமல் மருந்துகளை முறையற்ற முறையில் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2025- ஆம் ஆண்டில் ஒரு சில மாநிலங்களில் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாக மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும் படிக்க: “இந்திய மக்களாகிய நாம்” – என அரசியலமைப்புச் சட்டம் ஏன் தொடங்குகிறது? பின்னணி என்ன?




இருமல் மருந்துக்கா வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள்
2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கவோ வழங்குவோ கூடாது என்று அறிவுரையில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முறையான மருத்துவ மதிப்பீட்டுக்கு பிறகு தெளிவாக தேவைப்பட்டு பரிந்துரைக்கப்பட்டால் இன்றி அத்தகைய மருந்துகளை தவிர்க்க வேண்டும். மூத்த குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் தேவைப்பட்டால் முழுமையான மருத்துவ மதிப்பீட்டுக்கு பிறகு குறைந்தபட்ச செயல்திறன் மிக்க அளவில் மிக குறுகிய காலத்துக்கு குறிப்பிட்ட அளவுகளில் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.
இருமல் மருந்து பாட்டிலில் சிவப்பு நிறை எச்சரிக்கை லேபில்
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இருந்த நிலையில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், குளோர்பெனிரமைன் மேலேட் மற்றும் ஃபைனிலெஃப்ரின் ஹைட்ரோ குளோரைடு ஆகியவை கொண்ட அனைத்து நிலையான மருந்து கலவைகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுரைகளை இருமல் மருந்து பாட்டிலில் லேபிள் ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டிக்கெட் எடுக்காமல் மாட்டிக்கொண்ட இளம் பெண்.. திடீரென ஆடைகளை கிழித்துக்கொண்டு நாடகம்!