AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமா தந்த தைரியம்.. ‘ஜனநாயகன்’ படம் பார்த்து பாலியல் அத்துமீறலை வெளிப்படுத்திய 8 வயது சிறுமி!!

Jananayagan Movie Impact: முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘குட் டச், பேட் டச்’ குறித்த விழிப்புணர்வுக் காட்சியைப் பார்த்த 8 வயது சிறுமி ஒருவர், தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்துத் தனது தந்தையிடம் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.

சினிமா தந்த தைரியம்.. ‘ஜனநாயகன்’ படம் பார்த்து பாலியல் அத்துமீறலை வெளிப்படுத்திய 8 வயது சிறுமி!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Aug 2026 08:45 AM IST

சென்னை, ஆகஸ்ட் 07: திரைப்படங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் சமூகத்தில் எந்த அளவிற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாகச் சென்னையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான முக்கியமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்படத்தில் வரக்கூடிய ‘குட் டச், பேட் டச்’ காட்சியைத் திரையரங்கில் பார்த்த இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவர், தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து தனது தந்தையிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சென்னை மக்களிடையே நெகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மாறிய பெயர்கள்… மாறாத திட்டங்கள்?.. வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிளம்பிய விமர்சனம்!!

சம்பவத்தின் பின்னணி மற்றும் குடும்பச் சூழல்:

சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு 11 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடுகள் காரணமாகக் கடந்த சில மாதங்களாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமியின் தாய் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரிடம் தங்கி, அங்கேயே வீட்டு வேலைப் பணிகளைச் செய்து வந்துள்ளார். அவர் அவ்வப்போது கணவரின் வீட்டிற்கு வந்து குழந்தைகளைப் பார்த்துச் செல்வதுடன், சில நேரங்களில் குழந்தைகளைத் தான் வேலை செய்யும் இடத்திற்கும் அழைத்துச் சென்று சில நாட்கள் தங்க வைத்து அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

திரையரங்கில் விழிப்புணர்வு தந்த தைரியம்:

இந்த நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு திரையரங்கிற்குச் சென்று ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் விஜய், பள்ளிப் பருவக் குழந்தைகளிடம் உரையாடும் காட்சியில் ‘குட் டச் மற்றும் பேட் டச்’ என்றால் என்ன என்பதை விளக்கிக் கூறுவார். மேலும், யாராவது தவறான எண்ணத்துடன் அணுகினால் அல்லது கெட்ட தொடுதலில் ஈடுபட்டால், அதை மறைக்காமல் உடனடியாகத் தங்களது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று குழந்தைகள் மத்தியில் அறிவுறுத்துவார்.

திரையரங்கில் இக்காட்சியைப் பார்த்த அந்த 8 வயது சிறுமி, படம் முடிந்ததும் தனது தந்தையிடம் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். தனது தாய் வேலை செய்யும் வீட்டில் உள்ள ‘பெரியன்’ என்ற நபர், தன்னிடம் பலமுறை இதேபோன்று தவறான முறையில் நடந்து கொண்டதாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்:

சிறுமி கூறிய தகவலைக் கேட்டு பேரதிர்ச்சியடைந்த தந்தை, எவ்விதத் தாமதமுமின்றி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காகப் பெரியன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்சமயம் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சினிமாவில் வைக்கப்படும் ஒரு நல்ல சமூக விழிப்புணர்வுக் காட்சி, ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை வெளிக்கொணர்ந்து, குற்றவாளி தண்டனை பெறக் காரணமாக அமைந்த இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us