தொகுதி மறுசீரமைப்பு – தமிழக எம்பிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக அறிவிப்பு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் ஆகஸ்ட் 8, 2026 சனிக்கிழமை தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எம்.பி.களின் கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8, 2026 சனிக்கிழமை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 6 : தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் ஆகஸ்ட் 8, 2026 சனிக்கிழமை தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழக எம்பிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக அறிவிப்பு
ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழகத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8, 2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பு
ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு.#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |@imrajmohan | pic.twitter.com/YJ0GKTZAjE
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2026
இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ் புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநிலங்களுக்கு நியாயமான நிதிப் பகிர்வு கோரி நாளை சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மீனவர்களை விடுவிக்க கோரி முதல்வர் கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் கடற்படையினர், மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுவதப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
எனவே, உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்து. பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும், இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.