திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் கடந்த திமுக அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 6 : சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் ஆகஸ்ட் 6, 2026 இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ரூ.2 கோடியில் உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
இந்த நிலையில் இதுகுறித்து தனது விமர்சனங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழக வேளாண் பட்ஜெட் 2026 என குறிப்பிட்டுள்ளார்.




இதையும் படிக்க : Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!
மேலும் அவரது பதிவில், மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. கடந்த திமுக அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு… pic.twitter.com/YlD3WedXB3
— M.K.Stalin (@mkstalin) August 6, 2026
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!
இந்த நிலையில் பட்ஜெட் நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழுரை செய்து, அதாவது மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை எல்லாம் புது திட்டம் போல் பெயர் மாற்றி, ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அறிவித்துள்ளனர் என்றார்.
காவிரி விவகாரம் குறித்துப் பேச ஆகஸ்ட் 7, 2026 நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும் என்று பேசினார்.