AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ

WhatsApp Safety Features : மோசடியில் ஈடுபடும் நபர்கள் வங்கி பணியாளர், டெலிவரி ஊழியர், சிபிஐ போன்ற அரசு அதிகாரிகள் போல நடித்து மக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெற்று மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.

அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 May 2026 21:56 PM IST

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் போலியான போன் கால், ஓடிபி மோசடி, வங்கி டேட்டா திருட்டு போன்ற சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த 5 முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மோசடியில் ஈடுபடும் நபர்கள் வங்கி பணியாளர், டெலிவரி ஊழியர், சிபிஐ போன்ற அரசு அதிகாரிகள் போல நடித்து மக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பெற்று மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.

இதையும் படிக்க : விரைவில் வாட்ஸ்அப்பில் வரும் “Spoiler Messages” அம்சம்.. பயன் என்ன?

1. தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி

வாட்ஸ்அப்பில் Silence Unknown Callers என்ற இந்த அம்சத்தை ஆன் செய்தால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்அப் கால் ரிங் ஆகாது. அதற்கு பதிலாக கால் டேப் மற்றும் நோட்டிஃபிகேஷன் பகுதியில் மட்டும் காட்டப்படும். இதனால் மோசடிக்காரர்கள் பயனர்களை ஏமாற்றுவது தடுக்கப்படம்.

2. புதிய நம்பர்களுக்கான தகவல்கள்

தெரியாத நம்பர்களிலிருந்து மெசேஜ் வந்தால், தற்போது வாட்ஸ்அப், அந்த நம்பர் குறித்த தகவல்களை Context Card என்ற அம்சத்தின் மூலம் காட்டும்.

அதில், அந்த நம்பர் உங்கள் காண்டாக்டில் இருக்கிறதா? நீங்கள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் அந்த நம்பர் இருக்கிறதா? வேறு நாட்டை சேர்ந்த நம்பரா? சமீபத்தில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் பக்கமா என்பது போன்ற தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும். அந்த தகவல்களை வைத்து அந்த நம்பரை நம்பலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.

3. ஸ்கிரீன்ஷேர் எச்சரிக்கை

சில மோசடிக்காரர்கள் வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்ய சொல்லி, ஓடிபி மற்றும் வங்கி தகவல்களை திருடுகின்றனர். இதனைத் தடுக்க தற்போது தெரியாத நபர்களுடன் ஸ்கிரீன் ஷேர் செய்ய முயன்றால், வாட்ஸ்அப் எச்சரிக்கை காட்டும். இதனால் நாம் ஏமாற்றப்படுவதை தடுக்கும்.

இதையும் படிக்க : ரூ.51-க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால்கள்.. தினமும் 2ஜிபி நெட்.. BSNL தரும் சூப்பர் திட்டம்!

4. டிவைஸ் லிங்கிங் அலெர்ட்

மோசடிக்காரர்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை தங்களது லேப்டாப்பிலோ அல்லது போனிலோ இணைக்க முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அப்படி யாராவது உங்கள் வாட்ஸ்ப் கணக்கை வேறு லேப்டாப்பில் இணைக்க முயன்றால் நமக்கு எச்சரிக்கை மெசேஜ் வரும்.

5. Two Step Verification

வாட்ஸ்அப்பின் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று Two Step Verification. இந்த அம்சத்தை தேர்ந்தெடுத்தால், உங்கள் கணக்கை மீண்டும் வெரிஃபை செய்யும்போது 6 இலக்க பின் எண் கேட்கப்படும். இதன் மூலம் பின் இல்லாமல் யாராலும் நம் வாட்ஸ்அப்பை திறக்க முடியாது.

Follow Us