AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?

BMW Is Not Vehicle Company | தற்போதைய சூழலில் மிகப்பெரிய கார் நிறுவனமாக கருதப்படும் BMW உண்மையாகவே ஒரு கார் நிறுவனம் அல்ல. அது ஆரம்ப காலக்கட்டத்தில் விமானத்திற்கு இயந்திரங்களை தயாரித்து கொடுக்கும் நிறுவனமாக இருந்த நிலையில், தற்போது கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

BMW கார் நிறுவனம் இல்லையா?.. அந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டத்தில் எதனை தயாரித்தது தெரியுமா?
மாதிரி புகைப்படம் (Pic Credit : Gettyimages)
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Jul 2026 21:43 PM IST

BMW என்பது ஒரு பிரபல கார் நிறுவன் என்ற எண்ணம் தான் பலருக்கும் உள்ளது. சாலைகளில் இந்த கார்கள் சென்றாலே வியப்பாக பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் உள்ளது. ஒருபர் BMW கார் வைத்துள்ளார் என்றால் அவர் மிகவும் வசதியான நபர் என்ற பார்வையும் உள்ளது. BMW நிறுவனத்திற்கு பின்னால் இப்படி சில கதைகள் உள்ள நிலையில், அதன் உண்மையான கதை என்னவென்று தெரியுமா. BMW முதலில் ஒரு கார் நிறுவனமே கிடையாது, அது காலப்போக்கில் தான் உலகின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

அப்போதுன் BMW என்ன நிறுவனம், எதற்காக உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழலாம். அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

BMW நிறுவனம் உருவானதன் பின்னணி என்ன?

இந்த நிறுவனம் தொடங்கும்போதே ஒரு கார் நிறுவனமாக தொடங்கப்படவில்லை. இது 2000களின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த ஒரு சிறிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் BMW என்ற வார்த்தைகளுக்கான விரிவாக்கம் உள்ளது. அதாவது, Bayerische Motoren Werke என்பதுதான் விரிவாக்கம். அதாவது, ஜெர்மனியின் பவேரியப் பகுதியில் இயந்திரங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை இந்த பெயர் குறிக்கிறது.

இதையும் படிங்க : Spam Call தொல்லை கொடுக்கிறதா.. இதோ இப்படி Stop பண்ணிடலாம்.. முழு விவரம் இதோ!

BMW நிறுவனத்தின் தோற்றம்

இந்த நிறுவனம் 1916 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் கார்களை விட அதிக அளவு இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. அந்த காலக்கட்டத்தில் விமான தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சியை கண்டது. அப்போது, விமானத்திற்கு தேவையான பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயந்திரங்களை BMW வழங்கி வந்தது.

இதையும் படிங்க : கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி – ரூ.30,000 வரை விலை உயரும் – காரணம் என்ன?

இரண்டாம் உலக போருக்கு பிறகு தான் இந்த நிறுவனம் விமானத்தில் இருந்து மெல்ல மெல்ல மோட்டார் சைக்கிள், தானியங்கி வாகனங்களுக்கு மாறியது. இவ்வாறாக தான் BMW நிறுவனம் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனமாக தொடங்கி தற்போது பிரபல கார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us