ஷாக் கொடுத்த சாம்சங்.. எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது!
Samsung Increased Its S26 Series Price Hike | சாம்சங் நிறுவனம் தனது எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், சாம்சங் எஸ்26 சீரீஸில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களின் விலைகள் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. ஆப்பிள் (Apple) முதல் ஒன்பிளஸ் (OnePlus) வரை என பல நிறுவனங்கள் சமீபத்தில் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தின. அந்த வகையில் தான், தற்போது சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் (Samsung Galaxy S26 Series Smartphones) விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது, இந்தியாவில் இந்த சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வரும் நிறுவனங்கள்
2026 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. சமீபத்தில் தனது 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம், அவற்றின் விலை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமன்றி, ஆப்பிள் 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு பிறகு, 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையையும் அதிரடியாக உயர்த்தியது. மெமரி சிப்களின் பற்றாக்குறை காரணமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன.




இதையும் படிங்க : வாட்ஸ்அப் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும் அம்சங்கள்.. என்ன என்ன?
கேலக்ஸி எக்ஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்திய சாம்சங்
🚨 Samsung has increased the prices of all Galaxy S26 series variants in India by Rs 20,000. pic.twitter.com/UtgjKBZv5u
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 20, 2026
ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
- ரூ.87,999 மதிப்பிலான 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,07,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,07,999-ல் இருந்து ரூ.1,27,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,19,999-ல் இருந்து ரூ.1,39,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,39,999-ல் இருந்து ரூ.1,59,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வேலை, பயணம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த ANC இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்கள்
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,39,999-ல் இருந்து ரூ.1,59,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,59,999-ல் இருந்து ரூ.1,79,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.