கார்களின் விலை உயர்வை அறிவித்த மாருதி சுசூகி – ரூ.30,000 வரை விலை உயரும் – காரணம் என்ன?
ந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 2026, முதல் புதிய விலை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 2026, முதல் புதிய விலை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாடலை பொறுத்து ரூ.30,000 வரை கார்களின் விலை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன், 2026 மாதம் தான் கார்களின் விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வுக்கு காரணம் என்ன?
இதுகுறித்து வெளியான தகவலின் படி மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, பணவீக்கத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : கார் இருந்தால் கண்டிப்பாக சன்ஷேடு வேண்டுமா? வெப்பநிலையை இது உண்மையில் குறைக்குதா?




உற்பத்தி செலவை குறைக்க உள்நாட்டு செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதிகரித்து வரும் செலவினத்தை முழுமையாக தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக விலை உயர்வு ஒன்றே தீர்வு என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எந்தெந்த கார்களின் விலை உயரும்?
மாருதி சுசூகி தற்போது மாடல் வாரியாக கார் விலை உயர்வை அறிவிக்கவில்லை. இதனால் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விப்ட், டிசைர், பலினோ, பிரெஸ்ஸா, எர்டிகா, கிராண்ட் விடாரா போன்ற அனைத்து பிரபல மாடல்களிலும் இந்த விலை உயர்வு எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. மாடல் வாரியாக விலை உயர்வு விவரங்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற ஆகஸ்ட் 2026 முதல் விலை உயர்வுக்கு வரவிருப்பதால், கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் உடனடியாக முன்பதிவு செய்வதன் மூலம் விலை உயர்விலிருந்து தப்பிக்க வாய்பிபிருக்கிறது. ஆனால் அது நாம் வாங்கும் டீலரின் விதிமுறைகள், முன்பதிவு தேதி, கார் டெலிவரி செய்யப்படும் காரணத்தை பொறுத்து மாறுபடும்.
இதையும் படிக்க : புதிதாக பைக் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும்!
இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் மாருதி சசூகி கார்களின் விலை உயர்த்தியபோது, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றை காரணமாக தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே காரணத்திற்காக மீண்டும் விலை உயர்வை அறிவித்திருக்கிறது.
மாருதி சசூகி மட்டுமில்லாமல், டாடா மோட்டார், மகிந்திரா போன்ற நிறுவனங்களும் உற்பத்தி செலவு அதிகரிப்பை காரணம் காட்டி விலை உயர்வை அறிவித்திருக்கின்றன. இதற்கிடையில் மாருதி சுசூகி நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் கார்கள் என்பதால் இந்த விலை உயர்வு அவர்களை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.