கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி – எந்தெந்த மாடல்களின் விலை உயர்கிறது?
Maruti Suzuki Car Prices : மாருதி சுசூகி தனது கார்களின் விலையை மீண்டும் உயர்த்தத் தயாராகி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை 20,000 ரூபாய் வரை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் மாதத்திலேயே அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுசூகி தனது கார்களின் விலையை மீண்டும் உயர்த்தத் தயாராகி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை 20,000 ரூபாய் வரை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்திற்குப் பிறகு அந்நிறுவனம் மேற்கொள்ளும் 3வது விலை உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்களின் விலையை மீண்டும் உயர்த்திய மாருதி சுசூகி
அதிக உற்பத்திச் செலவுகள், தொடரும் பணவீக்க அழுத்தம் மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றின் தாக்கத்தை ஓரளவுக்கு ஈடுசெய்யவே இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, சாமானிய மக்களுக்கு ஒரு சவாலான விஷயமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க : அச்சுறுத்தும் “Frozen Screen UPI Scam”.. நொடி பொழுதில் பண காலி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி!
செலவுகளைக் குறைக்கத் தங்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதிக பணவீக்கம் மற்றும் உலகளாவிய சூழல் காரணமாக, அதிகரித்த செலவுகளின் ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டதாக பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகி இந்த ஆண்டில் ஏற்கனவே இருமுறை தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் காரணம் காட்டி ஏற்கனவே பல்வேறு மாடல்களின் விலையை 30,000 ரூபாய் வரை உயர்த்தியது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில், அதே காரணங்களைக் குறிப்பிட்டு, தனது அனைத்து பயணிகள் வாகனங்களின் விலையையும் 30,000 ரூபாய் வரை உயர்த்தியது.
இந்த விலை உயர்வு Alto K10, S-Presso, Celerio, Wagon-R, Swift, Dzire, Baleno, Fronx, Brezza, Ertiga, Grand Vitara, Jimny, Invicto உள்ளிட்ட பல மாடல்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்தது. ஒவ்வொரு மாடலுக்கும் விலை உயர்வு வெவ்வேறு அளவுகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய வாகனச் சந்தையைப் பொறுத்தவரை பண்டிகைக் காலம் மிகவும் பரபரப்பான விற்பனைக் காலமாகும். ஆகஸ்ட் மாதத்தில் பயணிகள் வாகனங்களுக்கு நல்ல தேவை இருந்தபோதிலும், உலகளாவிய சூழல் மற்றும் விலை உயர்வு ஆகியவை வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனைப் பாதிக்கும் என்று மாருதி உள்ளிட்ட அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் கவலை கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க : WhatsApp : வாட்ஸ்அப் சாட்டை ரீஸ்டோர் செய்வது எப்படி.. ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ!
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான ‘பலினோ’வின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைஅறிமுகப்படுத்தியுள்ளது. சிறிய வடிவமைப்பு மாற்றங்கள், புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பவர்ட்ரெயின் ஆகியவற்றுடன் பலினோவின் புதிய மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இக்காரின் அடிப்படை மாடலின் ரூ. 6.10 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



