AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜிமெயில், டாக்ஸில் வரும் ஏஐ.. இனி குரல் மூலமே பல வேலைகளை செய்யலாம்.. முழு விவரம்!

Google Introduced AI In Gmail and Docs | நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இந்த நிலையில் தான் ஜிமெயில் மற்றும் டாக்ஸ் செயலிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயில், டாக்ஸில் வரும் ஏஐ.. இனி குரல் மூலமே பல வேலைகளை செய்யலாம்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Sep 2026 13:10 PM IST

தற்போதைய சூழலில் அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் செயலிகளில் கூட செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் உள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகிய செயலிகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. அதனை பயனர்கள் பரவலாக பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தான், கூகுள் நிறுவனம் ஜிமெயில் மற்றும் டாக்ஸ் செயலிகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை குரல் கட்டளையின் மூலமே செயல்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜிமெயில் மற்றும் டாக்ஸ் (Gmail and Docs) ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஐ அம்சம் எப்படி செயல்படும், அதன் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயில், டாக்ஸிலும் இப்போது செயற்கை நுண்ணறிவு அம்சம்

ஜிமெயில் மற்றும் டாக்ஸ் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் அவற்றில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, ஜெமினி ஏஐ மூலம் பயனர்கள் கூகுள் மற்றும் டாக்ஸில் தங்களுக்கு தேவையான வேலைகளை மிக சுலபமாக முடித்துக்கொள்ள முடியும். கூகுள் நிறுவனம் குரல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஜிமெயிலில் மெயில்களை தேடுவது, புதிய டாக்குமெண்ட் உருவாக்குவது, நோட்ஸ் எடுப்பது உள்ளிட்ட செயல்களை மிக சுலபமாக செய்து முடிக்க முடியும்.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments.. இனி ஈஸி தான்.. பயன்படுத்துவது எப்படி?

எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகிறது?

ஜெமினி ஏஐ மூலம் ஜிமெயில் மற்றும் டாக்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த குரல் அம்சம் இந்த வாரத்தில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கூகுள் ஏஐ பிளஸ், ப்ரோ மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் விரைவில் கூகுள் ஒர்க் ஸ்பேஸ் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூகுள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us