AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments.. இனி ஈஸி தான்.. பயன்படுத்துவது எப்படி?

How To Use WhatsApp Bill Payments | மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பில் பேமெண்ட்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வந்த Bill Payments.. இனி ஈஸி தான்.. பயன்படுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Sep 2026 14:28 PM IST

மெட்டா (Meta) நிறுவனம் வாட்ஸ்அப்பில் (WhatsApp) தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான், தற்போது பில் பேமெண்ட் (Bill Payments) செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, கூகுள் பே (Google Pay) , போன் பே (Phone Pay) உள்ளிட்ட செயலிகளில் பில் கட்டணம் செலுத்துவது போல, இனி வாட்ஸ்அப் செயலி மூலமும் பில் கட்டணம் செலுத்தலாம். இந்த நிலையில், இந்த அம்சத்தின் சிறப்புகள் குறித்து, எப்படி செயல்படும் என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வந்த பில் பேமெண்ட்ஸ் அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் இதுவரை தனிநபர் சாட், குழு சாட், ஆடியோ கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ், வீடியோ மெசேஜ், ஆவணங்களை அனுப்புவது, தொடர்பு பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு பணம் அனுப்புவது உள்ளிட்ட சேவைகள் இருந்தது. இந்த நிலையில் தான், பில் பேமெண்ட் அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகியுள்ளது. இந்த அம்சத்தை பயன்படுத்தி டிவி ரீச்சார்ஜ், மொபைல் ரீச்சார்ஜ் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!

வாட்ஸ்அப் பில் பேமெண்ட்ஸ் அம்சம் – பயன்படுத்துவது எப்படி?

  1. முதலில் வாட்ஸ்அப் செயலியை திறந்து முகப்பு திரையின் மேல் பகுதியில் உள்ள ரூபாய்க்கான குறியீட்டை கிளிக் செய்ய வேண்டும்.
  2. அதில் உள்ள பில் கட்டண பிரிவை தேர்வு செய்து, உங்களுக்கான சேவை நிறுவனத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
  3. உங்களது கணக்கு விவரங்களை உள்ளிட்ட பிறகு, செலுத்த வேண்டிய தொகை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
  4. பிறகு யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்.
  5. பயனர்கள் தாங்கள் இதுவரை என்ன என்ன பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை “Payments Home” என்ற பக்கத்தின் மூலம் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றி வேறு ஏதேனும் செயலிகளை பயன்படுத்தாமல், வாட்ஸ்அப் பயன்படுத்தியே பில் கட்டணங்களை செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us