AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!

Ernst and Young Announced Special Bonus For Employees | அமெரிக்காவில் உள்ள ஏர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஊழியர்கள் ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஏஐ பயன்படுத்தவில்லை என்றால் போனஸ்.. அமெரிக்க நிறுவனம் அசத்தல் முயற்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Sep 2026 00:16 AM IST

தற்போதைய காலத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் இல்லாத துறையே இல்லை. கல்வி முதல் மருத்துவம் வரை என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் ஆதிக்கம் தான் உள்ளது. ஐடி உள்ளிட்ட பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில், பணியாளர்களை நீக்கிவிட்டு, அந்த இடங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பணியமர்த்தியுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான ஊழியர்கள் பணியை இழந்து, மிகவும் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மனிதர்களின் தனித்துவமான திறமைகளை ஊக்குவிக்க அதிரடி திட்டம்

அமேசான் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள், ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தும் நிலையில், உலகின் முன்னணி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான ஏர்னஸ்ட் அண்ட் யங் (EY – Ernst & Young) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுமையான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அனைத்து துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில், மனிதர்களின் தனித்துவமான திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : மனிதர்களின் கட்டளைகளை மதிக்காத ஏஐ.. கூட்டு சதியில் ஈடுபட்டதால் அதிர்ச்சி!

போனஸ் திட்டத்தை அறிமுகம் செய்த நிறுவனம்

இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவான EY US போனஸ் திட்டம் ஒன்றை ஊழியர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மிகவும் வித்தியாசமாகவும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. காரணம், பணியிடத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் முழுவதுமாக மனித திறமையை வெளிப்படுத்தும் விதமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஒருமுறை சார்ஜ் செய்தால் 310 கி.மீ பயணிக்கலாம் – சிறிய ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்திய சுசூகி

அவ்வாறு ஏஐ பயன்படுத்தாமல் பணியாற்றும் ஊழியர்களை பாராட்டுவதற்காக 100 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 800 கோடியை அந்த நிறுவனம் இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ சாதனங்களை பயன்படுத்தவும், ஊழியர்களை ஏஐ கற்றுக்கொள்ள வலியுறுத்துவதும் நடைபெற்று வரும் நிலையில், இந்த நிறுவனம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆச்சர்யத்தை எற்படுத்தியுள்ள நிலையில், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Follow Us