AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரின் பதவிக்கு ஆபத்து? பிசிசிஐ முடிவு என்ன?

Ajit Agarkar: இந்திய சீனியர் அணியின் தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவி கடந்த சில மாதங்களாகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்திய அணியின் தேர்வு தொடர்பாக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், வாரியம் அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கக்கூடும்.

Team India: தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரின் பதவிக்கு ஆபத்து? பிசிசிஐ முடிவு என்ன?
தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 01 Sep 2026 21:53 PM IST

அஜித் அகர்கர் இந்திய அணியின் (Indian Cricket Team) தலைமைத் தேர்வாளராகத் தொடர்வாரா என்பது குறித்து பிசிசிஐ விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. அகர்கரின் பதவிக்காலம் இந்த மாதமான 2026 செப்டம்பரில் முடிவடைகிறது. அவரது பதவிக்காலத்தை பிசிசிஐ மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமா என்பதே தற்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பிசிசிஐ அதிகாரிகள் மிக விரைவில் அகர்கரைச் சந்திக்க உள்ளனர். அடுத்த சில நாட்களில் அஜித் அகர்கருடன் ஒரு சந்திப்பை பிசிசிஐ திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் டாக் தகவலின்படி, அகர்கருக்கு பிசிசிஐ (BCCI) மற்றும் இந்திய அணிக்குள் கணிசமான ஆதரவு உள்ளது. ஆனால், அவர் தலைமைத் தேர்வாளராகத் தொடர்வாரா என்பது குறித்த முடிவு அந்தச் சந்திப்பிற்குப் பிறகே எடுக்கப்படும். அகர்கர் 2023-ல் தலைமைத் தேர்வாளர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இந்திய அணிக்கு நற்செய்தி.. குணமான காயம்.. அணிக்கு திரும்பும் பும்ரா, ஹர்திக்!

தலைமைத் தேர்வாளராக அஜித் அகர்கரின் பதவி கடந்த சில மாதங்களாகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்திய அணியின் தேர்வு தொடர்பாக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இருப்பினும், வாரியம் அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கக்கூடும். இருப்பினும், அப்பதவியில் தொடர விரும்புகிறாரா என்பதை அகர்கரே முடிவு செய்ய வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்திய அணியில் 3 வடிவங்களிலும் புதிய வீரர்கள் இணைந்திருப்பதையும், அனுபவ வீரர்கள் தொடர்ந்து அணியிலிருந்து விலகியிருப்பதையும் காணமுடிகிறது. எனவே, வருகின்ற 2027ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, அகர்கர் குறித்த பிசிசிஐ-யின் முடிவு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

ரோஹித் சர்மாவால் எழுந்த பிரச்சனை:

ரோஹித் சர்மா விவகாரத்தில் சில பிசிசிஐ அதிகாரிகளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக முந்தைய செய்திகள் வெளியாகின. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் தனது கடைசிப் போட்டியில் விளையாடுவார் என்று கிரிக்கெட் உலகம் கிட்டத்தட்ட யூகித்திருந்தது. மேலும், 2027 உலகக் கோப்பைத் திட்டங்களில் சேர்க்கப்பட மாட்டார் என்று தேர்வுக் குழு ரோஹித்திடம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் பிசிசிஐ ஓர் அறிக்கை வெளியிட்டு ஓய்வு வதந்திகளை மறுத்ததாகவும் தெரியவந்தது.

ALSO READ: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு.. ஆப்கானிஸ்தான் எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!

அஜித் அகர்கர் தலைமைத் தேர்வாளராகப் பொறுப்பேற்ற உடனேயே, இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அடுத்த 2024ம் ஆண்டு, இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றனர். மேலும் 2025-ல் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பின்னர் இந்தியா 2026 டி20 உலகக் கோப்பையை வென்றது. இருப்பினும், அவர் தலைமைத் தேர்வாளராக இருந்த காலத்தில், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படவில்லை.

Follow Us