IND vs AFG: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு.. ஆப்கானிஸ்தான் எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!
India vs Afganistan T20 Series: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என நான்கு ஆல்ரவுண்டர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் இருவரும் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாகவும், வேகப்பந்து வீச்சுப் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்து தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளார். உடற்தகுதிப் பிரச்சினைகள் காரணமாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஆப்கானிஸ்தான் நடத்தும் டெல்லியில் நடைபெறும். காயமடைந்த பல வீரர்கள் குணமடைந்து இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புகின்றனர்.
ALSO READ: விறுவிறுப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. குல்தீப் மீது கோபம் ஏன்..? சூர்யகுமார் யாதவ் விளக்கம்!




அணிக்கு திரும்பிய வீரர்கள்:
India’s squad for Afghanistan T20I series announced. #TeamIndia will play three T20Is against Afghanistan at New Delhi, beginning September 13.#AFGvIND pic.twitter.com/UqTUeZyHz8
— BCCI (@BCCI) September 1, 2026
சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, சுழற்பந்து ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் தொடருக்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என நான்கு ஆல்ரவுண்டர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேநேரத்தில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் இருவரும் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாகவும், வேகப்பந்து வீச்சுப் பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்து தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணி:
ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சக்ரவர்த்தி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா
ALSO READ: இந்திய வம்சாவளி வீரர்களுக்கு வாய்ப்பு.. இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி அறிவிப்பு!
இந்தியா-ஆப்கானிஸ்தான் டி20 தொடர் அட்டவணை
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி 2026 செப்டம்பர் 13 அன்றும், இரண்டாவது டி20 போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 15 அன்றும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி 2026 செப்டம்பர் 17 அன்றும் நடைபெறும். இந்த 3 போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும்.
- 2026 செப்டம்பர் 13 – முதல் டி20 – அருண் ஜேட்லி ஸ்டேடியம்
- 2026 செப்டம்பர் 15 – இரண்டாம் டி20 – அருண் ஜேட்லி ஸ்டேடியம்
- 2026 செப்டம்பர் 17 – மூன்றாம் டி20 – அருண் ஜேட்லி ஸ்டேடியம்