IND A vs AUS A: இந்திய வம்சாவளி வீரர்களுக்கு வாய்ப்பு.. இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி அறிவிப்பு!
Australia A squad for India Tour: ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் நிகில் சௌத்ரி மற்றும் தன்வீர் சங்கா என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தன்வீர் சங்கா ஒரு சுழற்பந்து வீச்சாளர், நிகில் சௌத்ரி ஒரு ஆல்-ரவுண்டராக அணிக்குப் பயனுள்ளதாக இருப்பார். தன்வீர் ஆஸ்திரேலியாவுக்காக 6 ஒருநாள் போட்டிகளிலும் 7 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலியா தனது இந்திய சுற்றுப்பயணத்திற்கான (IND A vs AUS A) ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை அறிவித்துள்ளது. இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் தலா 2 போட்டிகள் கொண்ட நான்கு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளன. அனுபவமிக்க பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் இந்த சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 35 வயதான ஹேண்ட்ஸ்காம்ப், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியில் உள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். கேப்டனாக இருப்பது மட்டுமின்றி, ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தியா ‘ஏ’ அணிக்கு (Indian A Team) எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை வெல்ல ஆஸ்திரேலிய ஏ அணி முயற்சிக்கும்.
ALSO READ: ஜப்பானில் வசதி குறைவு.. அனுபவ வீரர்களை அனுப்ப யோசிக்கும் பிசிசிஐ!




டோகெட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோருக்கும் வாய்ப்பு:
பிரண்டன் டோகெட் மற்றும் ஜை ரிச்சர்ட்சன் ஆகியோர், இந்தியா சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் நான்கு நாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவின் சீனியர் அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். குறிப்பிடத்தக்க வகையில், ரிச்சர்ட்சன் தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார். ரிச்சர்ட்சன் மீண்டும் களமிறங்கியதிலிருந்து 7 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, இதுவரை ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான அவரது சிறப்பான ஆட்டம், தேசிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். அடுத்த 2027ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பை 2027-க்கான ஆயத்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய தேர்வுக் குழு இந்த அணியில் அனுபவம் மற்றும் இளமைக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு
The Australia A squads for the tour of India have dropped, so what do you make of them?
MORE: https://t.co/Z9tlMrF5Ff pic.twitter.com/8B9doHmwRj
— cricket.com.au (@cricketcomau) August 31, 2026
ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் நிகில் சௌத்ரி மற்றும் தன்வீர் சங்கா என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தன்வீர் சங்கா ஒரு சுழற்பந்து வீச்சாளர், நிகில் சௌத்ரி ஒரு ஆல்-ரவுண்டராக அணிக்குப் பயனுள்ளதாக இருப்பார். தன்வீர் ஆஸ்திரேலியாவுக்காக 6 ஒருநாள் போட்டிகளிலும் 7 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் முறையே நான்கு மற்றும் பத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மறுபுறம், நிகில் சௌத்ரி ஆஸ்திரேலியாவுக்காக 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது தவிர, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, ஜோஷ் பிலிப், ஆலி பீக் மற்றும் கூப்பர் கானலி போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி
பிரெண்டன் டோகெட், ஜாக் எட்வர்ட்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், சாம் ஹார்ப்பர், லியாம் ஹேட்சர், கேம்ப்பெல் கெல்வே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, ஃபெர்கஸ் ஓ’நீல், ஜோஷ் பிலிப், ஜே ரிச்சர்ட்சன், கோரி ரோச்சியோலி, ஜேசன் சங்கா, லியாம் ஸ்காட்.
ஆஸ்திரேலியா ‘ஏ’ ஒருநாள் போட்டி அணி
மஹ்லி பியர்ட்மேன், நிகில் சௌத்ரி, பென் ட்வார்சியஸ், ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, ஸ்பென்சர் ஜான்சன், சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், தன்வீர் சங்கா, லியாம் ஸ்காட், லாக்லன் ஷா.
ALSO READ: இந்திய அணிக்கு நற்செய்தி.. குணமான காயம்.. அணிக்கு திரும்பும் பும்ரா, ஹர்திக்!
இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான தொடர் அட்டவணை
நான்கு நாள் போட்டிகள்:
- 2026 செப்டம்பர் 22 முதல் 25 வரை — முதல் போட்டி, புதுச்சேரி
- 2026 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை — இரண்டாவது போட்டி, புதுச்சேரி
ஒருநாள் தொடர்:
- 2026 அக்டோபர் 6 — முதல் ஒருநாள் போட்டி, புதுச்சேரி
- 2026 அக்டோபர் 9 — இரண்டாவது ஒருநாள் போட்டி, புதுச்சேரி
- 2026 அக்டோபர் 11 — மூன்றாவது ஒருநாள் போட்டி, புதுச்சேரி