Women’s Asia Cup 2026: மகளிர் ஆசிய கோப்பை இன்று தொடக்கம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
Women's Asia Cup 2026 India Schedule: 2026 மகளிர் ஆசியக் கோப்பையில் 8 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A-வில் ஹாங்காங், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும், குழு B-யில் நடப்புச் சாம்பியனான இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குழு சுற்றுக்குப் பிறகு, நாக்-அவுட் சுற்று தொடங்கும்.
மகளிர் டி20 ஆசியக் கோப்பை (Womens T20 Asia Cup 2026) இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தால் நடத்தப்படும் இது,டி20 வடிவத்தின் ஆறாவது பதிப்பாகும். முதல் போட்டி ஹாங்காங் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ள ‘ஏ’ பிரிவு போட்டியாகும். இந்தநிலையில், இந்தியாவின் போட்டி அட்டவணை, இந்தியா – பாகிஸ்தான் போட்டி (India vs Pakistan) மற்றும் இத்தொடர் குறித்த முக்கிய அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியானது இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 28 முதல் வருகின்ற 2026 செப்டம்பர் 13ம் தேதி வரை நடைபெறும். இது மகளிர் ஆசியக் கோப்பையின் 10வது பதிப்பு மற்றும் டி20 வடிவத்தில் நடைபெறும் 6வது பதிப்பாகும். இத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் விளையாடும். இத்தொடரில் 15 போட்டிகள் இடம்பெறும்.
ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026.. இந்தியா – பாகிஸ்தான் நேரடி மோதல்.. தேதி வாரியாக முழு விவரம்!




மகளிர் ஆசிய கோப்பை 2026-ன் வடிவம்
2026 மகளிர் ஆசியக் கோப்பையில் 8 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு A-வில் ஹாங்காங், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும், குழு B-யில் நடப்புச் சாம்பியனான இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குழு சுற்றுக்குப் பிறகு, நாக்-அவுட் சுற்று தொடங்கும். ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், மற்ற இரண்டு அணிகளை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதிப் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 10ம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 2026 செப்டம்பர் 11ம் தேதியும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் 2026 செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?
ஒரே குழுவில் இருப்பதால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியில் விளையாட உள்ளன. இந்திய மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி, வருகின்ற 2026 செப்டம்பர் 5ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு போட்டி தொடங்கும், டாஸ் இரவு 7:30 மணிக்கு நடைபெறும்.
ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை.. இந்திய அணி எப்போது களமிறங்கும்?
மகளிர் ஆசிய கோப்பை 2026-க்கான இந்தியாவின் அட்டவணை
- 2026 ஆகஸ்ட் 30 – தாய்லாந்து vs இந்தியா (இடம்- துபாய் – இரவு 8 மணி)
- 2026 செப்டம்பர் 3 – ஹாங்காங் vs இந்தியா (இடம் – துபாய்- இரவு 8 மணி)
- 2026 செப்டம்பர் 5 – பாகிஸ்தான் vs இந்தியா (இடம் – துபாய் – இரவு 8 மணி)
இந்திய அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பார்தி ஃபுல்மாலி, ரேணுகா சிங், ஷெபாலி வர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), நந்தனி ஷர்மா, பிரதிக் ராவல், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, கமலினி