AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Team India: ஜப்பானில் வசதி குறைவு.. அனுபவ வீரர்களை அனுப்ப யோசிக்கும் பிசிசிஐ!

Asian Games 2026: சீனாவில் நடைபெற்ற கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா, இம்முறையும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஒரு வலுவான அணியை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த அணி களமிறங்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.

Team India: ஜப்பானில் வசதி குறைவு.. அனுபவ வீரர்களை அனுப்ப யோசிக்கும் பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Aug 2026 08:00 AM IST

ஜப்பானின் ஐச்சி நகோயாவில் வருகின்ற 2026 செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (Asian Games 2026) தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) எடுத்து வருகிறது. அங்குள்ள கிரிக்கெட் வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் ஹோட்டல் வசதிகள் குறித்து பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆகிய இரண்டிலும் மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. நிலைமையை ஆய்வு செய்ய, பிசிசிஐ ஒரு பார்வையாளரை ஜப்பானுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டால், பிரதான இந்திய அணிக்கு (Indian Cricket Team) பதிலாக ‘பி’ அணியை அனுப்புவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: இந்திய அணிக்காக களமிறங்கும் சேவாக் – டிராவிட்டின் மகன்கள் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தேர்வு

ஜப்பானில் வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அதில், “ஏசிசி கூட்டத்தில் ஜப்பானிய ஒலிம்பிக் அமைப்பாளர்களிடம் எங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்தோம். கிரிக்கெட் வீரர்களுக்கான உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கழிவறைகள் அந்தக் கூடாரங்களிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளன. வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறைகளும் மிகவும் சிறியதாக உள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் வழங்கும் கள அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். மகளிர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆடவர் போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரையிலும் நடைபெறும்.

கடந்த முறை நடந்தது என்ன?

சீனாவில் நடைபெற்ற கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா, இம்முறையும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஒரு வலுவான அணியை அறிவித்துள்ளது. திலக் வர்மா துணை கேப்டனாக இருக்க, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சிவம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா மற்றும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள்.

ALSO READ: மகளிர் ஆசிய கோப்பை இன்று தொடக்கம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?

மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்:

ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் அணியின் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் உள்ளனர். இவர்களுடன், ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஜி. கமாலினி, பாரதி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தினி ஷர்மா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வசதிகள் குறித்த நிச்சயமற்ற நிலை தீர்க்கப்பட்ட பின்னரே மூத்த வீராங்கனைகளின் பயணம் குறித்த தகவல்கள் வெளியாகும்.

Follow Us