AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விசிக நிர்வாகி படுகொலை சம்பவம்.. 5 பேரை தட்டி தூக்கிய தனிப்படை? ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!

Chennai VCK Functionary Murder : சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை தனிப் படை போலீசார் கைது செய்து அதிரடி விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

விசிக நிர்வாகி படுகொலை சம்பவம்.. 5 பேரை தட்டி தூக்கிய தனிப்படை? ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!
படுகொலை செய்யப்பட்ட விசிக நிர்வாகி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Aug 2026 08:33 AM IST

சென்னை மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்த இவரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை ரகசியமான இடத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருநீர்மலை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அன்பழகன் தனது நண்பர்களுடன் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த கும்பல் அவரை கண் இமைக்கும் நேரத்தில் வெட்டி சாய்த்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில்…

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்பழகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், கொலை கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தேர்தல் வேட்டை நடத்தி வந்தனர்.

மேலும் படிக்க: பயணிகள் கவனத்துக்கு.. செங்கோட்டை ரயில்கள் சேவையில் திடீர் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

5 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை

இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்வதற்காக 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடிக்கி விடப்பட்டது. அதன்படி, விசிக நிர்வாகி கொலையில் தொடர்புடைய 5 பேர் பல்லாவரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர். அப்போது, போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே, சுதாரித்துக் கொண்ட பணிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தது.

ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடம் விசாரணை

தொடர்ந்து, அவர்களை காவல்துறையின் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

மேலும் படிக்க: 27 வழக்குகள்… 6 கொலைகள்.. தூத்துக்குடி துப்பாக்கி செல்வம் கொடூர கொலை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மர்ம கும்பல்!

Follow Us