Samantha: அந்த காட்சிகளுக்கு நான் நோ சொன்னதே இல்ல – சமந்தா!
Samantha Ruth Prabhu: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில், முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, சினிமாவில் நோ சொல்லாத காட்சி குறித்து பேசியிருந்தார்.
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் (Samantha Ruth Prabhu) நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் நாயகியாக நுழைந்த நிலையில், தமிழ் சினிமாவில் இவருக்கு பேராதரவு இருக்கிறது. இவர் தமிழில் முதலமைச்சர் விஜய் (CM Vijay) முதல் நடிகர் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). இந்த படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். கடந்த 2026ம் ஆண்டில் மே மாதத்தில் வெளியானது. இந்த படத்தின் வெற்றிக்கு பின், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தற்போது அவர் சினிமாவிலிருந்து கொஞ்ச நாள் இடைவெளியில் இருக்கிறார். தற்போது இவர் சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார்.
தற்போது சினிமாவிலிருந்து கொஞ்ச காலத்திற்கு இடைவெளியில் உள்ள நிலையில், சினிமாவில் எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, சினிமாவில் எந்த காட்சிகளுக்கெல்லாம் நடிக்க நோ சொன்னதில்லை என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: நான் மது அருந்துவதை விடுவதற்கு காரணம் அவர்தான் – ரஜினிகாந்த் தெரிவித்த விஷயம்!
சினிமாவில் எந்த காட்சிகளுக்கெல்லாம் நோ சொன்னதில்லை என்பது பற்றி சமந்தா:
அந்த பேட்டியில் சமந்தாவிடம், தொகுப்பாளர் “இதுவரைக்கு சினிமாவில் நீங்கள் எந்த காட்சிகளுக்காவது நடிக்கமாட்டேன் என நோ சொன்ன உண்டா?” என கேட்ட நிலையில், அதற்கு சமந்தா விளக்கமாக பேசியுள்ளார். அதில் சமந்தா , “நான் இதுவரைக்கும் எந்த காட்சிகளில் நடிப்பதற்கும் நோ சொன்னதில்லை. இப்போது நான் யாரையும் கிஸ் பண்ணமாட்டேன் என சொன்னேன் என்றால் என்னை உதைப்பார்கள்.
இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!
முதல் படத்திலே எல்லாம் பண்ணியாச்சு இப்போது என்ன கிஸ் பண்ணமாட்டேன்-னு சொல்றது என என்ன திட்டுவாங்க. அதனால் எதுவும் சொன்னதில்லை. ஆனால் எதாவது ஒரு காட்சியில் நடிக்க விருப்பமில்லை என்றால், அதை மாற்றி கேட்பேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை சமந்தா ரூத் பிரபு, தற்போது சினிமாவில் நாயகியாக நடித்துவருகிறார். இவர் தற்போது சினிமாவிலிருந்து கொஞ்ச இடைவெளியில் இருக்கிறாராம். தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், பெரிதாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.