Rajinikanth: நான் மது அருந்துவதை விடுவதற்கு காரணம் அவர்தான் – ரஜினிகாந்த் தெரிவித்த விஷயம்!
Rajinikanth Quits Alcohol: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரஜினிகாந்த். இவர் முன்னதாக நேர்காணல் பேசிய ரஜினிகாந்த், மது அருந்துவதை எவ்வாறு விட்டேன் மற்றும் அதற்கான காரணம் யார் என்பது குறித்து விவரமாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 171 திரைப்படங்கள் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு பின் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் மற்றும் அஸ்வத் மாரிமுத்து (Aswath Marimuthu) இயக்கத்தில் படங்களில் பணியாற்றிவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை 171 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து படங்களும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்த வகையில், சினிமாவின் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தவர் என அனைவருக்குமே தெரியும். அந்த விதத்தில், அந்த பழக்கத்தை எவ்வாறு அவர் விட்டார், அதற்கான காரணம் யார் என முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: மாஸான ஒரு ஸ்பை திரில்லர்.. சர்தார் 2 படத்தின் கதைக்களம் பற்றி தெரிவித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான பதிவு:
En kannin arthangalai thedi chendraayo, Kavithaigal thedi chendraayo! 😍♥️ #AlaBolelo #Jailer2
Watch #AlaBolelo Lyric Video
▶️ https://t.co/SX7Y0lRdvV@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @arunrajakamaraj @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza… pic.twitter.com/NfjpDCdsYT— Sun Pictures (@sunpictures) August 22, 2026
மது பழக்கத்தை எவ்வாறு விட்டார் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்த விஷயம்:
அந்த நேர்காணலில் ரஜினிகாந்த் பேசுகையில், “ஒரு முறை ஷூட்டிங்கின்போது, பேக்அப்-னு சொல்லிட்டாங்க. உடனே ஷூட்டிங் முடிந்ததும் நான் கொஞ்சம் மது அருந்திவிட்டு இருந்தேன். உடனே உதவி இயக்குநர் வந்து, சார் ஒரு காட்சி மிஸ் ஆகிவிட்டது. அதை எடுக்கவேண்டும் என இயக்குநர் சார் கூப்பிடுகிறார் என சொன்னாரு. எனக்கு எதுவும் ஓடவில்லை, நான் உடனே மீண்டும் குளித்துவிட்டு, பிரஸ் பண்ணிக்கொண்டு ஷூட்டிங்கிற்கு சென்றேன். இயக்குநர் பாலச்சந்தர் சார் நான் குடித்திருப்பதை கண்டுபிடித்துவிட்டார். உடனே பாலச்சந்தர் சார் என்னிடம், நாகேஷ் சார் தெரியுமா என கேட்டார்.
இதையும் படிங்க: காதலிச்சு கல்யாணம் பண்ணனும்.. இல்ல கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கும்.. நயன்தாரா – கவினின் ஹாய் பட ட்ரெய்லர் வெளியானது!
நான், தெரியும் சார் என சொன்னேன். “அவர் எப்பேர்ப்பட்ட நடிகர் தெரியுமா?, அவருக்கு முன்னாள் நீ ஒரு சின்ன இரும்புக்கு கூட சமம் இல்லை. மது அருந்தி அவரே அவரின் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிகிட்டாரு. இனிமேல் நீ சூட்டிங்கின்போது குடிப்பதை பார்த்தாலோ, கேட்டாலோ செருப்பால் அடிப்பேன்” என சொன்னாரு. அன்று நான் குடிப்பதை விட்டேன். அதன் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் ஷூட்டிங்கில் இருக்கும்போது எவ்வளவு குளிர் இருந்தாலும், நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன், தொடவே இல்லை” என அதில் அவர் கூறியிருந்தார்.