Hi Movie: காதலிச்சு கல்யாணம் பண்ணனும்.. இல்ல கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கும்.. நயன்தாரா – கவினின் ஹாய் பட ட்ரெய்லர் வெளியானது!
Nayanthara - Kavins Hi Trailer: இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்திருக்கும் புது திரைப்படம் ஹாய். இந்த படம் பீல் குட் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள நிலையில், வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அதை முன்னிட்டு இன்று (20/08/2026) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் மொழியை கடந்து பான் இந்திய திரைப்படங்களிலும் நாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அந்த விதத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி ரெடியான திரைப்படம் ஹாய் (Hi Movie). இதை இயக்குநரும், பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் நயன்தாரா தயாரித்துள்ளார். இதில் நயன்தாரா மற்றும் கவின் (Kavin) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது பீல் குட் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தில் நயன்தாரா மற்றும் கவின் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர். இப்படம் புதுவிதமான காதல் கதைக்களத்தில் உருவாகி நிலையில், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தற்போது இதன் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: என் மகன்கள் சினிமாவில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் – நடிகர் நாகர்ஜுனா
கவின் – நயன்தாராவின் ஹாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
#Hi trailer 🙂
▶️ https://t.co/aQzp9GZe3z@VishnuEdavan @Kavin_m_0431
— Nayanthara✨ (@NayantharaU) August 20, 2026
நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த படத்தின் ட்ரெய்லர் கலக்கலாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் கவின் மயில்சாமி என்ற வேடத்திலும், நயன்தாரா தேவியானி என்ற வேடத்திலும் நடித்துள்ளார். இதில் கவின் கொஞ்சம் பயத்தை ஆணாகவும், அடாவடி பெண்ணாகவும் நயன்தாரா நடித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான கே.பாக்கியராஜ் சினிமாவில் இறுதியாக நடித்த படமாக இது அமைந்துள்ளது. ஒரு பயந்த ஆணும், எதற்கும் பயப்படாத பெண்ணும் எவ்வாறு திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள் என்பது குறித்த கதையில் உருவாகியுள்ளதாக ட்ரெய்லரில் தெரிகிறது.
இதையும் படிங்க: சாதாரண மக்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு.. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பற்றி அதிதி சங்கர் பேச்சு!
ஹாய் திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் எப்போது:
இந்த ஹாய் திரைப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்த நிலையில், அவர்களுடன் ராதிகா சரத்குமார், கே.பாக்கியராஜ், பூர்ணிமா, பிரபு மற்றும் விடிவி கணேஷ் போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 25 மற்றும் 26ம் தேதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.