AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Vishwanath And Sons Movie Collection | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உலக அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம். இந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Aug 2026 13:26 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன்படி இந்த ஆண்டில் முதலாவதாக வெளியான கருப்பு படம் தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக உருவானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படத்தின் வசூல் தொடர்பான அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவில் விஸ்வநாத் & சன்ஸ் படம் மொத்தம் வசூலித்தது இவ்வளவா?

அதன்படி முன்னதகா உலக அளவில் படம் 4 நாட்களில் ரூபாய் 150 கோடிகளை வசூலித்ததாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு அமெரிக்காவில் இதுவரை 2 மில்லியன் டாலர்களை வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஒரு படத்தின் உண்மையான வெற்றி என்பது… தர்மதுரை படம் குறித்து எமோஷ்னலாக பேசிய இயக்குநர் சீனு ராமசாமி

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சர்தார் 2 படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த எஸ்.ஜே.சூர்யா – வைரலாகும் வீடியோ

Follow Us