AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் – துருவ் விக்ரம் ஓபன் டாக்

Dhruv Vikram talks about his fathers film | தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் துருவ் விக்ரம். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது தந்தை விக்ரம் நடிப்பில் வெளியான படங்களில் தனக்கு ஊக்கமளித்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் – துருவ் விக்ரம் ஓபன் டாக்
துருவ் விக்ரம் - விக்ரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Aug 2026 13:13 PM IST

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இறுதியாக வெளியான பைசன் காளமாடன் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி இந்த பைசன் காளமாடன் படம் நடிகர் துருவ் விக்ரமின் சினிமா வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கிய இந்த பைசன் காளமாடன் படம் கபாடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. நமது சினிமா ரசிகர்களிடையே ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் பைசன் காளமாடன் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் துருவ் விக்ரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஊக்கம் அளிக்கும் தந்தையின் படங்கள் என்ன என்ன என்பது குறித்து ஒரு லிஸ்டை தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும்:

அதன்படி பேட்டியில் துருவ் விக்ரமிடம் உங்களுக்கு ஊக்கள் அளிக்கும் உங்கள் தந்தை விக்ரமின் படம் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துருவ் விக்ரம் அப்பாவின் படங்களில் சேது, ராவணன், பொன்னியின் செல்வன், அந்நியன் மற்றும் பிதாமகன் ஆகியப் படங்கள் மிகவும் பிடிக்கும். எனக்கும் என் தந்தைக்கும் இடையே மிகச் சிறந்த உறவும் புரிதலும் உள்ளது. அவரது நடிப்புத் திறனை நான் மிகவும் மதிக்கிறேன். நாங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதோடு, எல்லாவற்றையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை… 25 ஆண்டுகளைக் கடந்தது பூவெல்லாம் உன் வாசம் படம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhruv Vikram: நான் எப்போதுமே அவரின் ரசிகன்.. அவர் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளார் – முதல்வர் விஜய் குறித்து துருவ் விக்ரம்!

Follow Us