Samantha: டிவி ஷோவில் தொகுப்பாளராக களமிறங்கிய சமந்தா.. எந்த நிகழ்ச்சி தெரியுமா?
Samantha Returns as TV Host: கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் ஆக்ஷன் நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கிறாராம். அந்த விதத்தில் தற்போது சின்னத்திரை தொகுப்பாளராக புதிய ஷோ ஒன்றில் களமிறங்கியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சிறப்பான நாயகியாக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram) என்ற படத்தின் மூலம் நாயகியாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படமானது தமிழில் எங்கள் தங்கம் என்ற டைட்டிலில் வெளியாகியிருந்தது. சமந்தா, 2 ஆண்டுக்கு பின் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், இப்படம் கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் அதிகம் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றிவிழாவின்போது சமந்தா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதனால் இவர் சினிமாவில் மீண்டும் ஒரு சிறிய இடைவெளி எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், தற்போது அவர் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக டிவி ஷோவில் (TV Show) வரவுள்ளாராம். அது எந்த நிகழ்ச்சி மற்றும் எந்த தொலைக்காட்சி என தெரிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சினிமாவில் 51வது வருடத்தில் சூப்பர் ஸ்டார்… ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட தர்மன் படக்குழு!
நடிகை சமந்தா தொகுக்கும் புது சின்னத்திரை நிகழ்ச்சி:
நடிகை சமந்தா ரூத் பிரபு, தற்போது “சோனி விழா” என்ற புதிய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். அது வேறு எந்த நிகழ்ச்சியுமில்லை, சன் டிவி மற்றும் சோனி லிவ்-வில் ஒளிபரப்பாகிவந்த மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை போல புதிதாக ஒரு நிகழ்ச்சியாம். இந்த நிகழ்ச்சிக்கு செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட்… விஸ்வநாத் & சன்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
இந்த நிகழ்ச்சியில் தமிழ் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளார்களாம். இதில் மொத்தம் 12 செலிபிரிட்டி போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்களாம். இதை சமந்தா ரூத் பிரபு தொகுக்கவுள்ள நிலையில், இன்னும் இதன் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்கள் யார் யார் என இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
சமந்தா தொகுக்கும் புதிய நிகழ்ச்சி குறித்து வெளியான புரோமோ வீடியோ பதிவு:
The ultimate culinary face-off begins here, with @Samanthaprabhu2 leading the way.
Celebrity MasterChef Tamil – Coming soon on Sony விழா and Sony LIV.#CelebrityMasterChefTamil #CMCTamil #Samantha #SonyVizha #SonyLIVTamil pic.twitter.com/sxHubOJ1dp
— Sony Vizha (@sony_vizha) August 15, 2026
சமந்தா இறுதியாக மா இன்டி பங்காராம் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது கர்ப்பகால இடைவெளியில் அவர் இருக்கும் நிலையில், சின்னத்திரை தொகுப்பாளராக நுழைந்துள்ளார். அதனால் படத்தில் இவரை பார்க்கமுடியாவிட்டாலும், செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.