AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லிவ் இன் ரிலேஷனில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை.. உண்மையை உடைத்த பிரபலம்!

Pandian Stores 2 Serial Actress: விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக கருதப்படுவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலானது தற்போது விஜய் டிவியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் பிரபல நடிகை ஒருவருடன் living in Relationship-ல் உள்ளதாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லிவ் இன் ரிலேஷனில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை.. உண்மையை உடைத்த பிரபலம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் நடிகைImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Aug 2026 20:17 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியாக இருந்துவருவதுதான் விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. அதில் மக்களின் மனதில் அதிகம் இடம்பிடிக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (Pandian Stores 2). இந்த சீரியல் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றுவருகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் இந்த சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் 2வது (TRP Rating) இடத்தில் உள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் லிவ்விங் டூகெதரில் (Living Together) இருப்பதாக இணையத்தில் தகவல்களை பரவிவருகிறது. அதை பிரபல நடிகரும், தொகுப்பாளருமான ஒருவர் உறுதி செய்துள்ளார்.

அது வேறுயாராயுமில்லை, நடிகர் ஆதவன்தான் (Aadhavan) . அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினி (Hashini) என்பவருடன் லிவிங் இன் ரிலேஷனில் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது பற்றி விவரங்கள் பின்வருவனவற்றில்.

இதையும் படிங்க: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்…. 3 ஆண்டுகளை நிறைவு செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்..!

லிவ்விங் ரிலேஷனில் இருப்பது குறித்து நடிகர் ஆதவன் பேசிய விஷயம்:

நடிகர் ஆதவன் அண்மையில் பேட்டி ஒன்றில், “எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் எனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை காசினி என்பவருடன் லிவிங்கில் இருக்கிறேன். அதை பற்றி சொல்வதற்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை, இது எனது முதல் பெண் குழந்தைக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்தால் நிச்சயம் அறிவிப்பேன்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அரச்சனா கல்பாத்தி அகோரத்துக்கு அரசு பதவி.. முதல்வர் விஜய் கொடுத்த முக்கிய பொறுப்பு.. என்ன அது!

ஹாசினியுடன், ஆதவன் பாடல் இணைந்து பாடியது தொடர்பான இன்ஸ்டாகிராம் போட்டோஸ்:

 

View this post on Instagram

 

A post shared by R. Karuna Vilasini (@haasiniofficial)

யார் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினி:

தற்போது விஜய் டிவியில் புகழ்பெற்ற சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில் ஸ்டாலினின் மூத்த மக்கள் வேடத்தில் நடித்துவருபவர்தான் ஹாசினி. இவர் இந்த சீரியலில் அவ்வப்போது வந்து செல்வதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான், நடிகர் ஆதவனுடன் லிவ்விங் ரிலேஷனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை ஹாசினி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us