AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்…. 3 ஆண்டுகளை நிறைவு செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்..!

3 Years Of Jailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியில் வெளியான நிலையில், இன்றுடன் (10/08/2026) மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான ஸ்பெஷல் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

Jailer: முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்…. 3 ஆண்டுகளை நிறைவு செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்..!
3 ஆண்டுகளை நிறைவு செய்த ஜெயிலர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Aug 2026 16:14 PM IST

ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவிலும் “சூப்பர் ஸ்டார்” (Superstar) என்று சொன்னாலே முதலில் நினைவிற்கு வருபவர் ரஜினிகாந்த்தான் (Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழில் 2023ம் ஆண்டில் வெளியாகி மாஸ் மற்றும் அதிரடி வெற்றியை பெற்ற திரைப்படம்தான் ஜெயிலர் (Jailer). இந்த படத்தை தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, சன் பிக்ச்சர் சிறப்பாக தயாரித்திருந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், ஒரு குடும்பத்தின் தலைவனாகவும் நடித்தது அசத்தியிருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்திருந்தார். இதில் ரஜினியுடன் பல்வேறு பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர். அனிருத்தின் இசையில், சிறப்பான கதையில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியிடப்பட்டது.

இன்று (10/08/2026) இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடவும் வகையில் ஜெயிலர் 1 படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தள்ளிபோகிறதா அரசன் படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்

ஜெயிலர் 1 படம் 3 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் வீடியோ பதிவு:

ஜெயிலர் 1 படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாகியுள்ளது. ஜெயிலர் 1 படத்திற்கு முன் நடந்ததையும், ஜெயிலர் 1 படத்திற்கு பின் நடக்கும் கதையையும் மையமாக கொண்டு ஜெயிலர் 2 உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் பட டிக்கெட் ப்ரீ-புக்கிங் எப்போது தொடக்கம்? – வெளியான அறிவிப்பு!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது:

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. பூஜை விடுமுறையை முன்ணனிட்டு இப்படம் வெளியாகிறதாம். இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணம் இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Follow Us