Nelson Dilipkumar: ஜெயிலர் 2 பிளாக்பஸ்டர்.. எடிட்டர் குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய நெல்சன் திலீப்குமார்!
Jailer 2 Movie Success: தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படும் இயக்குநர்களில் ஒருவர்தான் நெல்சன் திலீப்குமார். இவரின் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை, எடிட்டர்களுடன் இணைந்து நெல்சன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
2026ம் ஆண்டில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Director Nelson Dilipkumar) இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) ஹீரோவாக நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படமானது வெளியானது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக ரஜினிகாந்த், தற்போது தர்மன் (Dharman Movie) திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்குறார். இதை தமிழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் நிலையில், பிரம்மாண்டமான மற்றும் சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படமானது தமிழில் சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழில் 2026ல் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெயரில் உள்ளது. இந்நிலையில் இதை கொண்டாடவும் விதத்தில் இப்படத்தின் எடிட்டர் குழு, கேக் வெட்டி சிறப்பித்துள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அன்புக்கு ரொம்ப நன்றி.. சர்ப்ரைஸாக தியேட்டர்களை விசிட் செய்த சாய் பல்லவி!
ஜெயிலர் 2 படத்தின் வெற்றியை எடிட்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய நெல்சன் திலீப்குமார் குறித்த பதிவு:
Celebrating #Jailer2 ❤️
As the Editor, bringing all departments together to celebrate this journey was a proud and emotional moment
Every frame carries countless efforts and passion This success belongs to every single person 🔥
@Nelsondilpkumar ❤️
@rajinikanth 🔥
@sunpictures https://t.co/ByvFRhY3AT— Nirmal@editor (@Nirmalcuts) November 22, 2026
இந்த கொண்டாட்டத்தில் ஜெயிலர் 2 படத்தின் எடிட்டர் ஆர்.நிர்மல் மற்றும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் ஆர்ட் டிராக்டர் என பல்வேறு பிரபலங்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி வரவேற்பு:
இந்த ஜெயிலர் 2 திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலிக்குமார் சிறப்பாக இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது பான் இந்திய வெற்றி திரைப்படமாக அமைந்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: பிக்பாஸில் வாரம் முழுவதும் அநாகரீகமாக நடந்துகொண்ட ஜேசன்… அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் விஜய் சேதுபதி – வைரலாகும் புரோமோ வீடியோ
உலகமெங்கும் சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் இப்படமானது வசூல் செய்திருந்ததம. தற்போது அமேசான் பிரைம் ஓடிடி மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் இந்த படமானது ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. இந்த படம் திரையரங்குகளை போலவே ஓடிடியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



