இது நிஜமாவே பிரேமலு படத்தோட இந்தி ரீமேக்கா? வைரலாகும் பிரேம் கீதனு பட ட்ரெய்லர்
Prem Keetanu Movie Official Teaser | மலையாள சினிமாவில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிரேமலு. இந்தப் படத்தினை இந்தி மொழியில் பிரேம் கீதனு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
மலையாள சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி பான் இந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிரேமலு. மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் கிரிஷ் ஏடி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் நஸ்லேன் நாயகனாகவும் நடிகை மமிதா பைஜூ நாயகியாகவும் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர்கள் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூவின் சினிமா வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் அவர்கள் தற்போது நடித்து வருகின்றனர். இந்த நிலையில் மலையாள சினிமாவில் ஹிட் அடித்த பிரேமலு படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிரேமலு படத்தினை இந்தி மொழியில் பிரேம் கீதனு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் அபூர் சிங் கார்க்கி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் வீர் பஹாரியா, அபர்சக்தி குரானா, ராகேஷ் பேடி, நிகில் விஜய் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




இது நிஜமாவே பிரேமலு படத்தோட இந்தி ரீமேக்கா?
இந்த நிலையில் இந்த பிரேம் கீதனு என்ற படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியாகி உள்ளது. பிரேமலு படத்தின் இந்தி ரீமேக் படமான இந்தப் படத்தின் டீசரைப் பார்க்கும் போது இது அப்படியே பிரேமலு படத்தின் ரீமேக்காக இல்லை என்று தெரிகிறது. மேலும் பல புதுப் புதுக் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள் இதுவரை பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் வெற்றிப் பெறுமா இல்லையா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read… ஃபுல் ஆக்ஷன்… இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்தது கலிஃபா படத்தின் ட்ரெய்லர்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Mollywood To Bollywood
The trailer of the Bollywood remake of #Premalu has been released. It is not like the original version, but has made a few changes.
No film that is remade has ever been successful in Bollywood. Let’s wait and see what this film will be like.
How Is…
— Movie Tamil (@_MovieTamil) August 17, 2026
Also Read… வெற்றிநடைபோடும் விஸ்வநாத் & சன்ஸ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்