விக்ரமின் சியான்63 பட பாடல் ஷூட்டிங் காட்சி இணையத்தில் லீக் – அதிர்ச்சியில் படக்குழு!
Chiyaan63 Song Leak: இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில், சியான் விக்ரம் இணைந்துள்ள புது படம்தான் சியான்63. இந்த படமானது ஒரு கிராமத்து ஆக்ஷன் அதிரடி கதையில் உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் பாடல் ஷூட்டிங் காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது தற்போது படக்குழுவின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2) என்ற திரைப்படமானது வெளியானது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த படமானது வெளியாகியிருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் விக்ரம் இணைந்தார், பின் அந்த படம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்க்கு பின் விக்ரம் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் சியான்63 (Chiyaan63). இதை இருமுகன் (Irumugan) படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் (Anand Shankar) இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துவருகிறது. சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில், இப்படத்தின் பாடல் ஷூட்டிங்கின்போது விக்ரம் நடனமாடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துவரும் நிலையில், இவரின் இசையில் சியான்63 பட அறிமுக பாடலின் ஷூட்டிங் காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், படக்குழுவின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஃபீல் குட் படம்… வைரலாகும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தின் ட்ரெய்லர்
விக்ரமின் சியான்63 படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் பரவிவருவது தொடர்பான எக்ஸ் பதிவு:
#chiyaan63 பட பிடிப்பு காட்சிகள் லீக் @chiyaan pic.twitter.com/2eaxVbTMaP
— Jay (@Jayaseelan_16) August 15, 2026
நடிகர் விக்ரம் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில், குரங்குடன் வெளியிட்ட வீடியோவின் காரணமாக பெரும் பிரச்சனையை சந்தித்துவருகிறார். இந்த பிரச்சனையின் நடுவே, தற்போது அவர் நடித்துவரும் புதிய படத்தின் பாடலில் நடனமாடுவதுபோன்ற காட்சிகளும் இணையத்தில் கசிந்துள்ளது. இது தற்போது விக்ரம் ரசிகர்கள் மற்றும் சியான்63 படக்குழுவின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரமின் சியான்63 படத்தின் ஷூட்டிங் நிலை என்ன:
நடிகர் விக்ரம், இயக்குநர் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் சியான்63 படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், 2வது கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சர்வம் மாயா பட நடிகை ரியா ஷிபு நடிக்கிறார். அவர்களுடன் நடிகர்கள் ஊர்வசி, ஷம்மி திலகன் மற்றும் சம்யுக்த ஹெக்டே போன்ற பிரபலன்களு இணைந்து நடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் டிசி பட வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய AA23 படக்குழு!
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.