AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chiyaan Vikram: மூணார் ட்ரிப் சென்ற சியான் விக்ரம்… சுற்றி குவிந்த பெண் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

Chiyaan Vikrams Munnar Trip Viral Video: சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான் விக்ரம். இவர் சமீபத்தில் மூணார் ட்ரிப் சென்றிருந்த நிலையில், அங்கு தேயிலை தொடத்தில் வேலை பார்த்த பெண் ரசிகர்களுடன், எடுக்கப்பட்ட கலகலப்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Chiyaan Vikram: மூணார் ட்ரிப் சென்ற சியான் விக்ரம்… சுற்றி குவிந்த பெண் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
சியான் விக்ரம் மூணார் பயணம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 May 2026 13:16 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவருக்கு வயது 60 ஆக இருந்தாலும், இன்னும் இளமையான நாயகனாகவே திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. 60வது வயதான இவர் இளமையான தோற்றத்தில், இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் விதத்தில் திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் 2 (veera Dheera Sooran 2) என்ற படமானது வெளியானது. இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்து, இவரின் சமீபகால இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாகிவந்தது. சியான் விக்ரம் வெளியிட்ட அந்த வீடியோவை, கேரளா காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான வீடியோவாக வெளியிட்டது.

இதை விக்ரமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது, மூணாருக்கு (Munnar) தனது நண்பர்களுடன் விக்ரம் டிரிப் சென்றிருந்த நிலையில், அங்கு தேயிலை தோட்டத்து பெண்களை சந்தித்து அவர்களிடம் கலகலப்பாக பேசியுள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கண்ணுங்களா.. செல்லங்களா.. உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி – எமோஷனலாக பேசி சூர்யா வெளியிட்ட வீடியோ!

பெண் ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய சியான் விக்ரமின் வைரலாகும் வீடியோ:

நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் மூணாருக்கு ட்ரிப்பாக தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது, அங்கு அவர் தேயிலை தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டபோது, அவரின் அன்பான பெண் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது, அவரின் படங்கள் பற்றியும், அந்நியன் பட “அண்டங்காக்கா கொண்டகாரி” பாடலை பாடி, தனது ரசிகர்களுடன் நடனமாடியிருந்தார். தனது பெண் ரசிகர்களுடன் சியான் விக்ரம் நனடமாடி, கலகலப்பாக பேசிய வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: பெத்தி பட 3 நிமிட ட்ரெய்லர்.. முழுக்க அனல் பறக்கும் – அப்டேட் கொடுத்த சிரஞ்சீவி!

சியான் விக்ரமின் புதிய திரைப்படம் :

நடிகர் விக்ரம் தற்போது, இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சியான்63 என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் விக்ரம் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ரியா ஷிபு நடித்துவருகிறார். இவர் மலையாளத்தில் வெளியான சர்வம் மாயா படத்தில் டெலுலு என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சியான்63 படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us