AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Malavika Mohanan: விஜய் சார் எனது நெருங்கிய நண்பர்.. நடிகை மாளவிகா மோகனன் பேச்சு!

Malavika Mohanan About Thalapathy Vijay: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவருபவர் மாளவிகா மோகனன். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த இவர், நடிகரும், முதலமைச்சருமான விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Malavika Mohanan: விஜய் சார் எனது நெருங்கிய நண்பர்.. நடிகை மாளவிகா மோகனன் பேச்சு!
மாளவிகா மோகனன் மற்றும் தளபதி விஜய்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 May 2026 15:49 PM IST

மலையாள சினிமாவின் மூலமாக கதாநாயகியாக நுழைந்து, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துவருபவர் மாளவிகா மோகனன் (Malavika Mohanan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தி ராஜா சாப் (The Raja Saab). இப்படத்தில் நடிகர் பிரபாஸிற்கு (Prabhas) ஜோடியாக பைரவி என்ற வேடத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதுதான் இவர் தெலுங்கில் நடித்திருந்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்திற்கு பிறகும் தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி போன்ற படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) மாஸ்டர் (Master) படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க தொடங்கினார். மேலும் தற்போது விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) ஜோடியாக பாக்கெட் நாவல் (Pocket Novel) என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா (Thiagarajan Kumararaja) இயக்கிவருகிறார்.

இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மாளவிகா மோகனிடம் பத்திரிகையாளர்கள் தளபதி விஜய் குறித்து கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் கொடுத்த பதில் குறித்து விவரமாக பற்களும்.

இதையும் படிங்க: திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் கருப்பு.. பாராட்டி பதிவை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் விஷ்ணு விஷால்!

தளபதி விஜய் குறித்து நடிகை மாளவிகா மோகனன் சொன்ன விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர் ஒருவர், “திரிஷா மேடம் விஜய் சார் எங்கு போனாலும் பின்னாலே செல்கிறார் அதுபோலவே நீங்களும் போவீர்களா?” என எடக்கு மடக்காக கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா மோகனன், “என்ன இவ்வாறு கேள்வி கேட்கிறீர்கள்?” என கேட்டிருந்தார். மேலும் முதல்வர் விஜய் குறித்து பேசியிருந்தார். அப்போது அவர், “இப்போதுதான் அரசியல் அமைக்கப்பட்டுள்ளது, எது பற்றி எனக்கு சொல்ல தெரியாது. விஜய் சார் எனக்கும் மிகவும் நெருங்கிய நண்பர், அவரின் வெற்றியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என அதில் அவர் கூறியிருந்தார் .

இதையும் படிங்க: ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படக்குழு – எப்போது தெரியுமா?

தளபதி விஜய் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பேசிய வீடியோ பதிவு:

நடிகை மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் என்ற ஒரு படத்தில் மட்டுமே ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து தற்போது இவரின் நடிப்பில் கார்த்தி நடித்த சர்தார் 2 படமானது வெளியாக தயாராகிவருகிறது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் பாக்கெட் நாவல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிவரும் நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் மீது ரசிகர்ளுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

Follow Us