முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்
South Indian Artistes' Association bearers conveyed their congratulations to Chief Minister Joseph Vijay | தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலாம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராகி உள்ளார் நடிகர் தளபதி விஜய். ஒரு இயக்குநரின் மகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆன விஜய் தொடர்ந்து தனது கடின உழைப்பின் காரணமாக அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். இவர் சினிமாவில் அறிமுகம் ஆகி ஆரம்ப காலக்கட்டத்தில் ரசிகர்கள் இவரை இளைய தளபதி என்று செல்லமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து இளைய தளபதியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார். தொடர்ந்து இளைய தளபதி என்ற இடத்தில் இருந்து தளபதி என்ற இடத்திற்கு முன்னேறினார். மேலும் தனது இடத்தை யாரும் எட்ட முடியாத அளவிற்கு தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார் நடிகர் தளபதி விஜய்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் பிசியாக நடித்து வந்த நடிகர் தளபதி விஜய் தன்னை சினிமாவில் இந்த இடத்தில் கொண்டு வந்து அமர்த்திய தமிழக மக்களுக்கு நன்றிகடன் செலுத்தும் விதமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று முதலமைச்சராக பல நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். சினிமாவில் உச்சத்தில் அமர வைத்த மக்கள் அவரை முதலமைச்சர் சீட்டிலும் அமர வைகக் தவறவில்லை. அதிக இடங்களில் வெற்றியடையச் செய்து தளபதி விஜயை முதலமைச்சர் விஜயாக மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.




முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சங்க நிர்வாகிகள்:
இந்த நிலையில் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதற்கு தொடர்ந்து பலரும் சமூக வலைதளம் மூலமாகவோ, நேரில் சென்றோ தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர்கள் நாசர், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகியோர் நேரில் சென்று தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதில் நாசர் மற்றும் கருணாஸ் இருவரும் விஜய் தேர்தலில் போட்டியிடும் போது பல விமர்சனங்களை தெரிவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கருணாஸ் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… Marshal: கருப்பு படத்தை தொடர்ந்து சிக்கலில் கார்த்தியின் மார்ஷல் படம்? – விவரங்கள் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு.ஜோசப்விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் இன்று தலைமைசெயலகத்தில் நேரில் சென்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.#NadigarSangam #siaa#actornasser #Karthi #PoochiSMurugan #karunaas#johnsoncinepro pic.twitter.com/KNonztuiJc
— nadigarsangam pr news (@siaaprnews) May 15, 2026
Also Read… ஜெர்சி படத்தில் நானியின் உணர்வுபூர்வமான காட்சியை ரீ கிரியேட் செய்த ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் வீடியோ