Marshal: கருப்பு படத்தை தொடர்ந்து சிக்கலில் கார்த்தியின் மார்ஷல் படம்? – விவரங்கள் இதோ!
Marshal Movie Release Update: நடிகர் கார்த்தியின் நடிப்பிலும், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகிவரும் படம்தான் மார்ஷல். இதை இயக்குநர் தமிழ் இயக்கியுள்ள நிலையில், கார்த்தி நடித்துவருகிறார். இப்படத்தின் வெளியீட்டிலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது.
நடிகர் கார்த்தியின் (karthi) நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படமானது பழம்பெரும் நடிகர் எம்ஜிஆர்-ஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்ததாக கார்த்தி நடித்துவரும் திரைப்படம்தான் மார்ஷல் (Marshal). இதை டாணாக்காரன் படத்தை இயக்கியிருந்த தமிழ் (Tamizh) இயக்கிவருகிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) நாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துவரும் நிலையில், இவரே சூர்யாவின் கருப்பு படத்தையும் தயாரித்திருந்தார். அந்த வகையில் கருப்பு படமானது நிதி பிரச்சனையின் காரணமாக ஒரு நாள் தாமதமாகி பின், 2026 மே 15ம் தேதியில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் அதே நிதி பிரச்சனையை கார்த்தியின் மார்ஷல் படமும் சந்திக்க வாய்ப்புள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.




இதையும் படிங்க: ரவி மோகன் – ஆர்த்தி ரவியின் விவகாரம்.. வெளிப்படையாக அதிரடி பதில் கொடுத்த பாடகி கெனிஷா!
வெளியீட்டில் சிக்கலை சந்திக்குமா கார்த்தியின் மார்ஷல் திரைப்படம்:
சூர்யாவின் கருப்பு படமானது இறுதி நேரத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கடன் பிரச்சனையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ 75 கோடி நிதி பிரச்சனை இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் கிட்டத்தட்ட ரூ 60 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாம் மீதி இன்னும் ரூ 15 கோடிகள் கடன் மட்டுமே இருக்கும் நிலையில், கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு அந்த தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாம்.
இதையும் படிங்க: நீதி காக்க கோர்ட் ஏறும் கருப்பசாமி.. சூர்யாவின் கருப்பு படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
அந்த வகையில் கார்த்தியின் மார்ஷல் படமானது விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுவரும் நிலையில், இதனால் இப்படமும் பிரச்சனையை சந்திக்குமா என கேள்விகள் எழுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விரைவில் அந்த கடனை கொடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில், மார்ஷல் படத்தின் வெளியீட்டு எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.
மார்ஷல் படத்தின் ரிலீஸ் சிக்கல் தொடர்பாக வைரலாகும் பதிவு:
#Karuppu – As per sources, #Suriya has given surety for ₹60 Cr. Still, there was ₹15 Cr pending, in which the financier has agreed to a settlement later. SR Prabhu has promised to clear the deficit before #Karthi’s #Marshal release. pic.twitter.com/ZjEStXNmv7
— Movies Singapore (@MoviesSingapore) May 15, 2026
கார்த்தியின் மார்ஷல் படமானது 1965களில் நடந்த உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். இப்படம் கடற்கரை கிராமத்தில் நடக்கும் படமாக தயாராகிவரும் நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து, படக்குழு வெளியீட்டை முடிவு செய்ய திட்டமிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.