AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெர்சி படத்தில் நானியின் உணர்வுபூர்வமான காட்சியை ரீ கிரியேட் செய்த ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் வீடியோ

RJ Balaji Emotional Video Viral On Social Media: பல தடைகளைத் தாண்டி இன்று நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி உணர்ச்சி மிகு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜெர்சி படத்தில் நானியின் உணர்வுபூர்வமான காட்சியை ரீ கிரியேட் செய்த ஆர்.ஜே.பாலாஜி – வைரலாகும் வீடியோ
ஆர்.ஏஜ்.பாலாஜி
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 May 2026 19:03 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் பேசப்படுவது கருப்பு படத்தின் ரிலீஸ் தான். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள நிலையில் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி படத்தை எழுதி இயக்கி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தின் பணிகள் நடைப்பெற்று இருந்த நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து மலையாள சினிமாவில் பிரபல நடிகராக உள்ள இந்திரன்ஸ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இந்தப் படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் இந்த கருப்பு படத்திற்காக ரசிகர்கள் அதிக அளவில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் நேற்று 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் ஒரு நிதி சிக்கலில் இருந்த காரணத்தால் படம் வெளியாகாமல் தடைப்பட்டது.

கருப்பு படத்தின் ரிலீஸை உணர்வுபூர்வமா கொண்டாடிய ஆர்.ஜே.பாலாஜி:

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கருப்பு படம் ரிலீஸ் தேதி அறிவித்து அன்றைக்கும் படம் வெளியாகாமல் போனதால் மனம் உடைந்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அழுதுக்கொண்டே வீடியோ வெளியிட்டது பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. கருப்பு படத்தின் பிரச்சனைகள் முடிவடைந்து இன்று படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் முதல் காட்சி திரையிட்ட பிறகு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி திரையரங்கில் கத்தி தனது உணர்வுகளை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. மேலும் நானியின் ஜெர்சி படத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கும் அந்த காட்சியை அவர் ரீ கிரியேட் செய்துள்ளார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மோலிவுட் சினிமாவில் வெளியான அதிரடி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் வீடியோ:

Also Read… ஜனநாயகனை போல கருப்பு படமும் ஆன்லைனில் லீக்? தயாரிப்பாளர்கள் பரபரப்பு தகவல்

Follow Us