பேசில் – டொவினோ நடிப்பில் வெளியானது அதிரடி படத்தின் ட்ரெய்லர்
Athiradi Movie Official Trailer | நடிகர்கள் பேசில் ஜோசஃப், டொவினோ தாமஸ் மற்றும் வினித் ஸ்ரீனிவாசனின் நடிப்பில் உருவாகி உள்ளது அதிரடி படம். நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் பேசில் ஜோசஃப், டொவினோ தாமஸ் மற்றும் வினித் ஸ்ரீனிவாசன். இதில் நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் இருவரும் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை இயக்கவும் செய்து வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் தனித் தனியாக நடிக்கும் படங்களே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இவர்கள் மூன்று பேரும் அதிரடி என்ற படத்தில் இணைந்து நடித்து உள்ளனர். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தமிழ் உட்பட தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி படத்தை இயக்குநர் அருண் அனிருதன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பாளர்கள் அனந்து மற்றும் பேசில் ஜோசஃப் இருவரும் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்தப் படத்தில் நடிகர்கள் ஷரின் ஷிஹாப் மற்றும் ரியா ஷிபு முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். முன்னதாக சர்வம் மாயா படத்தில் நடிகை ரியா ஷிபு நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




அதிரடியாக வெளியானது அதிரடி படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் மலையாள சினிமாவில் உருவாகி உள்ள இந்த அதிரடி படம் நாளை 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்தில் கல்லூரி மாணவனாக இருக்கு பேசில் ஜோசஃப் மற்றும் லோக்கல் ரவுடியாக இருக்கும் டொவினோ தாமஸ் இடையே நடக்கும் ரவுசான சண்டையே கதை என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது புரிகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The World of #Athiradi is here…🔥 #Athiradi Trailer Out Now! ⚡
🎶 #VishnuVijay@basiljoseph25 @ttovino @Vineethsreeni84 @riyashibu_ #ArunAnirudhan pic.twitter.com/PeP1zQoXQQ
— Saregama South (@saregamasouth) May 13, 2026
Also Read… இந்திய வரலாற்றிலே முதல்.. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருதை வென்ற நடிகை ரோஜாவின் மகள்!