ஃபஹத் ஃபாசிலை வைத்து நான் எடுக்கும் படம் இப்படிதான் இருக்கும் – இயக்குநர் பிரேம் குமார் அப்டேட்!
Fahadh Faasil And Prem Kumar Movie: கோலிவுட் சினிமாவில் சினிமோட்டோகிராஃபராக இருந்து, தற்போது இயக்குநராக பிரபலமானவர் சி.பிரேம்குமார். இவர் நடிகர் ஃபஹத் ஃபாசிலை வைத்து புது படம் இயக்குவதாக கூறியிருந்த நிலையில், அப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.பிரேம்குமார் (C Prem Kumar). இவர் இதற்கு முன்பு படங்களில் சினிமோட்டோகிராஃபராக பணியாற்றிவந்தார். அந்த வகையில் திரிஷா (Trisha) மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த,96 என்ற படத்தின் முலமாக இயக்குநராக நுழைந்து, தனது முதல் படத்திலே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்த நிலையில், இதையடுத்ததாக கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமியை வைத்து மெய்யழகன் (Meiyazhagan) என்ற படத்தை கடந்த 2024ம் ஆண்டு இயக்கியிருந்தார். வித்தியாசமான மற்றும் பீல் குட் கதைக்களத்தில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து விக்ரமின் சியான் 64 (Chiyaan64) படத்தை இயங்குவதாகவும், ஃபஹத் ஃபாசிலை (Fahadh Faasil) வைத்து புது படம் இயங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சி.பிரேம்குமார், ஃபஹத் ஃபாசிலை வைத்து அவர் இயக்கும் படம் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டு சென்ற ரஜினிகாந்த்
இயக்குநர் பிரேம் குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ஃபஹத் ஃபாசிலை வைத்து இயக்கும் படம் குறித்து சி பிரேம் குமார் பேச்சு:
இயக்குநர் பிரேம் குமார் பேசுகையில், நான் இதுவரை எடுத்த திரைப்படங்கள் மாதிரி, இந்த படம் இருக்காது. இப்படம் குறித்து பெரிய ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை, இது திரில்லர் ஜானர் கொண்ட படமாக இருக்கும். முன்பெல்லாம் இரு கதாபாத்திரங்களை மெயினாக வைத்து படம் எடுத்தேன், ஃபஹத் ஃபாசில் வைத்தும் இயக்கும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான் மெய்யின்” என அதில் அவர் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்
ஃபஹத் ஃபாசில் மற்றும் பிரேம் குமார் கூட்டணி படம் :
மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் மற்றும் இயக்குநர் சி பிரேம் குமார் கூட்டணியில் புது படமானது தயாராகவுள்ளது. தற்போது இயக்குநர் பிரேம்குமார் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படமானது திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.