கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும் – நடிகர் கார்த்தி புகழாரம்
Actor Karthi talks about Karuppu movie Suriya character: நேற்று ஹைதராபாத்தில் நடந்த கருப்பு படத்தின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி அந்தப் படத்தில் தனது அண்ணனின் கதாப்பாத்திரம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் அண்ணன் மற்றும் தம்பி என இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன்கள் ஆவார்கள். சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா பல ஆண்டுகளுக்கு முன்பே திரைத்துரையில் நடிகராக காலடி பதித்துவிட்டார். அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் போதுதான் அவரது தம்பி நடிகர் கார்த்தி திரைத்துறையில் நாயகனாக அறிமுகம் ஆனார். தற்போது இரண்டு பேருமே பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகன்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் நடிப்பிலும் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி திரையரங்குகளில் வரிசையாக வெளியாகி வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரிவியூ ஷோ நேற்று ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு பேசினர். அதன்படி சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அண்ணன் சூர்யா மற்றும் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கருப்பு படத்தை சூர்யா அண்ணாவால் மட்டுமே பண்ணமுடியும்:
அதன்படி கருப்பு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது, நான் அண்ணாவின் சில காட்சிகளையும் பாடல்களையும் பார்த்தேன் கருப்பு படத்தில். ‘God Mode’ (அசுரத்தனமான) பாணியில், இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை வேறு யாராலும் ஏற்று நடிக்க முடியாது. அண்ணாவால் மட்டுமே அதைச் செய்ய முடியும். அது வேற லெவல் மாஸாக இருந்தது. இது போன்ற திரைப்படங்கள் இணையவாசிகளை இலக்காகக் கொண்டவை அல்ல. திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்க நான் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… இயக்குநரை கரம்பிடித்தார் நடிகை ரவீனா ரவி – வாழ்த்தும் பிரபலங்கள்
இணையத்தில் வைரலாகும் நடிகர் கார்த்தியின் பேச்சு:
The moment I heard “God Mode”. I knew only my Brother @Suriya_offl could pull it off ❤️🔥- Hero @Karthi_Offl Speech at #Veerabhadrudu Pre-Release Event.
In Cinemas from May 14, 2026 🎬#Karuppu @trishtrashers @RJ_Balaji @SaiAbhyankkar @dop_gkvishnu… pic.twitter.com/FaO7U1Ujji
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 11, 2026
Also Read… விஜயின் ஸ்டார்டம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒரு மாயாஜாலம் – நடிகர் மோகன்லால்