AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநரை கரம்பிடித்தார் நடிகை ரவீனா ரவி – வாழ்த்தும் பிரபலங்கள்

Actress Raveena Ravi Weds Valatty Movie Director Devan | சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது பணியைத் தொடங்கி தற்போது நடிகையாக வலம் வரும் நடிகை ரவீனா ரவி இயக்குநர் தேவனை திருமணம் செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநரை கரம்பிடித்தார் நடிகை ரவீனா ரவி – வாழ்த்தும் பிரபலங்கள்
ரவீனா மற்றும் தேவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 May 2026 14:26 PM IST

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியைத் தொடங்கியவர் ரவீனா ரவி. இவர் மூன்று மொழிகளிலும் வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் விளம்பர படங்களுக்கு தொடர்ந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி உள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலப் படங்களில் நடிகையாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாள சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரவீனா ரவி. தமிழ் சினிமாவில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக அறிமுகமான லவ் டுடே படத்தில் அவரது அக்காவாகவும் நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாகவும் நடித்து ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தார்.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஃபகத் பாசிலின் மனைவியாக நடித்து மலையாள சினிமா ரசிகர்களிடையேயும் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரவீனா ரவி. இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான ஆசாதி என்ற படத்தில் ரவீனா ரவி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநரை கரம்பிடித்தார் நடிகை ரவீனா ரவி:

தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ரவீனா ரவி நேற்று தனது நீண்ட நாள காதலரான இயக்குநர் தேவன் ராஜ்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் முன்னதாக மலையாள சினிமாவில் வாலாட்டி என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மலையாள சினிமாவில் உருவாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையேயும் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Read… விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது – நடிகை மமிதா பைஜூ நெகிழ்ச்சிப் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் தேரவரகொண்டா பர்த்டே ஸ்பெஷல்… புதிய போஸ்டரை வெளியிட்ட ரௌடி ஜனார்தனா படக்குழு

Follow Us