AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jiiva: நான் ஹீரோவாகும் முன்னே அந்த வேலைதான் பார்த்தேன் – நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!

Jiiva About His Pre-acting Career:தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தற்போது தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் ஜீவா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் அவர், தான் ஹீரோவாகுவதற்கு முன் பார்த்த வேலை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Jiiva: நான் ஹீரோவாகும் முன்னே அந்த வேலைதான் பார்த்தேன் – நடிகர் ஜீவா பகிர்ந்த விஷயம்!
நடிகர் ஜீவா Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 08 May 2026 08:27 AM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜீவா (Jiiva). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். இவர் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) நண்பா (Nanban) படத்தில் நடித்திருக்கிறார், மேலும் ஜில்லா படத்தில் கேமியோ வேடத்திலும் நடித்திருக்கிறார். நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி சௌத்ரி (R.B. Chowdhury) மிகப்பெரிய தயாரிப்பாளர் என்ற நிலையில், விஜய்யின் நடிப்பில் வெளியான 7க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஜீவாவும் தயாரிப்பாளரின் மகனாக இருந்து, தற்போது சினிமாவில் பிரபல நடிகராக தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தலைவர் தம்பி தலைமையில் (Thalaivar Thambi Thalaimaiyil) என்ற படமானது வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டிருந்தது.

இந்த படத்தை அடுத்ததாக புதிய படங்களிலும் ஜீவா நடித்துவருகிறார். அந்த வகையில் முன்னதாக ஒரு நேர்காணலில் பேசியிருந்த ஜீவா, அவர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்துக்கொண்டிருந்தார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தனுஷின் வாத்தி படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் இவரா? இவர் நடித்திருந்தால் மெகா ஹிட்டாகிறுக்குமே!

ஹீரோவாக நடிப்பதற்கு முன் பார்த்த வேலை பற்றி ஜீவா பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் நடிகர் ஜீவா பேசுகையில், “நான் சினிமாவில் நடிகராகுவதற்கு முன்பு ஆபிசில் கணக்கு எழுதிக்கொண்டிருந்தேன். மேலும் கம்பியூட்ட சம்மந்தமான வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தேன். மேலும் கிராபிக்ஸ் வேலைகளும் பார்த்திருந்தேன். நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்த ரோஜா கூட்டம் படத்திற்கு நான்தான் டிசைன் பண்ணியிருந்தேன். நான் நடிகராக ஆக்குவதற்கு முன் எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது, நடிகரான பிறகு நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

இதையும் படிங்க: விஜய் சாருக்காக ஒரு கதை எழுதியிருந்தேன்.. ஆனால் – அபிஷன் ஜீவிந்த் ஓபன் டாக்!

ஹார்ஸ் ரைட்டிங், நீச்சல் , ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் போன்ற விஷயங்களை நான் நடிகராகிய பிறகே கற்றுக்கொண்டேன். மேலும் இதுவரை நான் பணியாற்றியதிலே ரொம்பவே கடினமான இயக்குநர்கள் என்றால், முதலில் அமீர் பற்றி சொல்லுவேன், ராம் படம் கஷ்டப்பட்டு நடித்தேன். அதன் பிறகு, கே.வி.ஆனந்த் சார், ஷங்கர் சார் மற்றும் ஜனா போன்ற இயக்குநர்களுடன் வேலை பார்க்கும்போது சவாலாக இருந்தது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் ஜீவாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Jiiva (@actorjiiva)

நடிகர் ஜீவாவின் நடிப்பில் ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படமானது தயாராகிவருகிறது. இதை சிவா மனசுல சக்தி என்ற படத்தை இயக்கியிருந்த, இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் வெளியீட்டிருக்க வரும் என கூறப்படுகிறது.

Follow Us