Jiiva47: ‘SMS வைப் ரிட்டர்ன்’.. ஜீவாவின் 47வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான வீடியோ..
Jiiva47 Movie Title: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜீவா. இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் வெளியாகிவருகிறது. அதில் இவருக்கு பல படங்கள் வரவேற்பை கொடுக்கவில்லை. அந்த வகையில் சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் உடன் ஜீவா47 படத்தில் இணையத்துள்ளார். ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜீவா (Jiiva) தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகிவருகிறது. ஒரு தயாரிப்பாளரின் மகனாக இருந்த இவர், சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் தனது சிறுவயதிலே படத்தில் சிறு சிறு வேடத்தில் நடிக்க தொடங்கினார். பின் தனது தந்தையின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) நிறுவனத்தின் கீழ் உருவான “ஆசை ஆசையாய்” (Aasai Aasaiyai) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு முதல் படம் அந்தளவிற்கு வரவேற்பை கொடுக்காவிட்டாலும், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார்.அந்த வகையில் இவருக்கு பல படங்கள் நல்ல வரவேற்பையும் கொடுக்க தொடங்கியது. மேலும் இவர் தளபதி விஜய்யுடனும் (Thalapathy Vijay) நண்பன் (Nanban) என்ற படத்திலும் இணைந்தது நடித்து வரவேற்பை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் நடிப்பில் எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத படம்தான் சிவா மனசுல சக்தி (Siva Manasula Sakthi).
இதை இயக்குநர் ராஜேஷ் எம் (Rajesh M) இயக்கியிருந்தார். இந்த கூட்டணி கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையந்துள்ளது. அந்த படம்தான் ஜீவா47 (JIiva47) என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 4ம் தேதியில் நடிகர் ஜீவா தனது 42வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: இது அண்ணன் தம்பி பொங்கல்… ஜனநாயகன் vs பராசக்தி – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
ஜீவா47 திரைப்படத்தின் டைட்டில் என்ன :
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் ஜீவா47 என் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 4ம் தேதியில் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு படக்குழு “ஜாலியாக இருந்த ஒருத்தன்” (Jaliya Iruntha Oruthan) (ஜியோ) (JIO) என டைட்டில் வைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
நடிகர் ஜீவா வெளியிட்ட ஜீவா47 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ பதிவு :
The “SMS” vibe returns… ✨🎬🔥
Thrilled to share the title promo of my next #jiiva47 with @rajeshmdirector & @thisisysr produced by @malikstreams. 💥
Need all ur love and suport 💌❤️🙌 @jiothemovie @rajeshmjiivayuvan @smscombohttps://t.co/OcLtnZbDEM— Jiiva (@JiivaOfficial) January 4, 2026
இந்த படத்தை இயக்குநர் ராஜேஷ் எம் இயக்க, மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துவருகிறது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படமானது தயாராகிவருகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் லாஸ்ட் ரோர்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்..
இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படமும் சிவா மனசுல சக்தி திரைப்படத்தை போன்ற கதைக்களத்தில் தயாராகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.