Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பார்வதி- கம்ருதீனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து அடுத்து வெளியேறும் நபர் யார்? இணையத்தில் வைரலாகும் தகவல் இதோ!

Bigg Boss Tamil 9: தமிழில் தற்போது ஒளிபரபட்டப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இப்போட்டியிலிருந்து ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பார்வதி மற்றும் கம்ருதீன் என இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், இதை தொடர்நது இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேறுகிறார் என்பது பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பார்வதி- கம்ருதீனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து அடுத்து வெளியேறும் நபர் யார்? இணையத்தில் வைரலாகும் தகவல் இதோ!
பிக் பாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jan 2026 11:18 AM IST

பான் இந்திய அளவிற்கு பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருபவது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் ஆண்டுதோறும் நடந்தப்பட்டுவருகிறது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் சுமார் 100 நாட்களுக்கும் மேல் ஒரே வீட்டில் அடைக்கப்பட்டு, அவர்களுக்கு டாஸ்க் போன்றவை கொடுக்கப்படும். இந்த வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் யார் தாக்குப்பிடித்து மக்களின் வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது தமிழிலும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக நடந்தப்பட்டுவருகிறது. கடந்த பிக் பாஸ் சீசன் 8 முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தமிழில் தொகுக்க ஆரம்பித்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) தமிழையும் தொகுத்துவருகிறார். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டதட்ட 90 நாட்களை கடந்த நிலையில், இன்னும் 2 வாரங்களில் முழுமையாக நிறைவடைந்துவிடும்.

அந்த வகையில் மக்களின் எதிர்ப்பு மற்றும் பிக்பாஸ் வீட்டில் அநாகரிகமாக நடந்து கொண்டதை கருத்தில் கொண்டு பார்வதி (Parvathy) மற்றும் கம்ருதீன் (Kamruddin) இருவருக்குமே ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு, நேற்று 2026 ஜனவரி 3ம் தேதியில் வெளியேற்றப்பட்டிருந்தனர். அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 4ம் தேதியில் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து சுபிக்ஷா (Subiksha) வெளியேறுவார் என கூறப்படுகிறது. ஆனால் மற்றொருபுறம் ரெட்கார்ட் கொடுக்கப்பட்டு 2 போட்டியாளர்க வெளியேறிய நிலையில், இந்த வாரத்தில் எலிமினேஷன் இருக்காது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி கொடுத்த ரெட் கார்ட்… அதிரடியாக வெளியேற்றப்பட்ட பார்வதி – கம்ருதீன்.. இணையத்தை தெறிக்கவிடும் புரோமோ!

பிக் பாஸ் சீசன் 9 தமிழின் 91வது நாளின் முதல் புரோமோ பதிவு :

இந்த் புரோமோவில் விஜய் சேதுபதி மற்ற போட்டியாளர்களை பாராட்டும் விதத்தில் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து எந்த போட்டியாளர் வெளியேறினாலும் அவர்கள் வெற்றியாளர்கள்தான் என கூறியிருந்தார். அதன்படி அவர் கையில் இருந்த கார்டை காண்பித்தும் அரோரா மற்றும் சுபிக்ஷா இருவரும் குதிப்பது போன்று இந்த புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தளபதி விஜய்யின் லாஸ்ட் ரோர்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்..

அந்த வகையில் இந்த வாரத்தின் இறுதியில் எலிமினேஷன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் என கூறப்படுகிறது. எது நடக்கிறது என்பது பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இந்த போட்டியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கை அரோரா வென்ற நிலையில், கடைசி 2போட்டியாளர்களில் அவரும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.